தே.பொருட்கள்..
புது வேப்பெண்ணெய் 1/4 படி
நல்லெண்ணெய் 1/4 படி
சதுரக் கள்ளியை வெதுப்பிப்
பிழிந்த சாறு 1/2 படி
மாம்பட்டைச் சாறு 1/2 படி
மாங்கொழுந்துச் சாறு 1/2 படி
மாம்பூவின் மொக்குச் சாறு 1/2 படி
எருக்கம் வேர்ப்பட்டைச் சாறு 1/2 படி
இவைகளைச் சேர்த்து 15 எட்டிக் கொட்டைகளை எடுத்து அரைத்துச் சேர்த்து எண்ணெய் எரித்து வைத்துக் கொள்ளவும். கட்டு வாதம், சூலை, கனத்த வாத நோய்களுக்கு எல்லாம் மேலே பூசிப் பிடித்து விட நோய் தீரும்.
நொச்சித் தழையைப் போட்டு வெந்நீர் காயவைத்துக் கொள்ளவும். மத்தியானம் சாப்பிடவும் இத் தைலத்தைப் பூசி, நொச்சித் தழைத் தண்ணீரை விட்டு சுருளப் பிடித்து விட வாதம் தீரும். அதில் உடனே குணமாகாவிடின் நான்கு நாள் புளி நீக்கிப் பத்தியம் காத்து. அதே விதமாகப் பிடித்து விடத் தீரும்.
No comments:
Post a Comment