Thursday, April 4, 2024

ஓமவள்ளி இலை l சட்டென பறக்கும் சளி தொல்லை


சுவாச கோளாறுகளுக்கு கைவசம் 3 இலைகள் மட்டுமே போதும்.. ஒட்டுமொத்த தொந்தரவும் ஒரே நாளில் ஓடிவிடும். அப்படிப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்தவைதான் ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி இலை. பெரும்பாலும் சளி, காய்ச்சல் என்றால், மிளகு, இஞ்சி இந்த இரண்டை மூலிகைகளையும் தவிர்க்கக்கூடாது. மக்னீசியம், இரும்பு, வைட்டமின் K, நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டதுதான் மிளகு.

புற்றுநோய்: அஜீரண கோளாறுகளை மட்டுமல்லாமல், உடலை நச்சுக்களிலிருந்து காப்பாற்றி, புற்றுநோயிலிருந்தும் விடுவிக்க உதவுவதும் இந்த மிளகுதான். இந்த மிளகில் டீ போட்டு குடிப்பதால், கொழுப்புகள் குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அந்தவகையில், மிளகு ரசம் போலவே, 2 புதினா இலைகளை சேர்த்து மிளகு டீ தயாரித்து குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும்.

இஞ்சியும் அதுபோலவே, தொண்டைக்கு இதமான பண்புகளை கொண்டுள்ளது. அதனால்தான், இருமலுக்கான சிரப்புகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது சளியை நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது.. நுரையீரலிலிருந்து சளியை தளர்த்தி வெளியேற்ற உதவுகிறது.. தொண்டையின் பின்புறத்தில் இருமலை தூண்டும் வலிமிகுந்த கூச்ச உணர்வை இஞ்சி கட்டுப்படுத்தவும் செய்யும்.

3 இலைகள்: அந்தவகையில், சுவாச கோளாறுகளுக்கு 3 இலைகளையும் தவிர்க்கக்கூடாது. அதில் முக்கியமானது ஓமவள்ளி.. ஓமவள்ளி இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், ஓமவள்ளி இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.


ஓமவள்ளி: ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். அல்லது இந்த ஓமவள்ளி இலையை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, சிறிது பனகற்கண்டு சேர்த்து குடித்து வந்தாலும் நன்மை பயக்கும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும். தலைவலிக்கு இலையைக் கசக்கித் தலையில் தடவலாம்

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, ஓமவள்ளி எனப்படும் கற்பூரவல்லி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடலாம்.. அதேபோல, வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.

கஷாயம்: இந்த கற்பூரவல்லி இலைகளை கஷாயம் போல தயாரிக்கலாம்.. அதாவது, கொத்தமல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடித்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடிகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட காய்ச்ச வேண்டும். இறுதியில், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால், கற்பூரவல்லி கஷாயம் தயார். இருமல், சளி, தொண்டை வலி, போன்றவற்றுக்கு மிகவும் நல்லது.

துளசி இலைகளை எடுத்துக் கொண்டால், வெறுமனே மென்று சாப்பிட்டால், சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாம்.. காரணம், துளசி இலைகளில் அதிக அளவு பாதரசம், இரும்புச்சத்து இருப்பதால், நாம் துளசியை மெல்லும்போது அவை வெளிப்படும்.. மென்று சாப்பிடுவது நம் பற்களை கறைபடுத்தும்.. நிறமாற்றத்தை பற்களுக்கு தந்துவிடும். எனாமலில் தேய்மானத்தையும் ஏற்படுத்தும்.. அதனால், லேசாக மெல்ல வேண்டும்.. அல்லது முழுவதுமாக துளசியை விழுங்க வேண்டும் என்கிறார்கள்.

சளி, இருமல்: மழைக்காலங்களில் தண்ணீரில் 3, 4 தூதுவளை போட்டுக்கொதிக்க வைத்து குடித்தால் இருமலை கட்டுப்படுத்தும். இருமல் உண்டாகும்போது, சிறிதளவு தூதுவளை இலையை கழுவ, மென்று சாப்பிட, இருமல் குறையும். ஆவி பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் தூதுவளை முக்கியமானது. தூதுவளையின் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது. மழைக்காலம்: குறிப்பாக மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இந்த செடியின் தேவை நிச்சயம் இருக்கும்.. இந்த இலையின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். தூதுவளை இலைகளை தண்ணீரில் சேர்த்து குடித்தால், பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...




No comments:

Post a Comment