Tuesday, April 2, 2024
வாகனங்களில் பல்வேறு வண்ணங்களில் நம்பர் பிளேட்
வாகனங்களில் பல்வேறு வண்ணங்களில் நம்பர் பிளேட் (கருப்பு, மஞ்சள், பச்சை) இருப்பதன் காரணம் என்ன?
தனிநபர் (Private) பயன்படுத்தும் வாகனங்கள் வெள்ளை நிற பின்னணியில் கறுப்பு நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
வணிகம் மற்றும் வாடகைக்கான (Commerical) வாகனங்களில் மஞ்சள் வண்ணம் பின்னணியில் கறுப்பு நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும் .
ஓட்டுநர் இல்லாமலேயே வாடிக்கையாளர்கள் (Rental ) தங்கள் தேவைக்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வாகனங்கள் கறுப்பு வண்ண பின்னணியில் மஞ்சள் நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெளிநாட்டு தூதரக (Foreign Embassy ) வாகனங்களில் வெளிர் நீல நிற பின்னணியில் வெள்ளை நிற எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்கல (Electric) வாகனங்கள் பச்சை நிற பின்னணியில் வெள்ளை நிற எண்களைக்கொண்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment