சர்க்கரை நோயாளி பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா? இது பெஸ்ட் வாழைப்பழம்*
பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? அப்படியே அசந்துடுவீங்க. அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது.
வாழைப்பழங்களில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக இருக்கிறது.. இதைத்தவிர, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் இப்படி எல்லா சத்துக்களும் வாழைப்பழத்தில் இருக்கின்றன..
1 கிராம் பச்சை வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரை சத்துக்களும் இதில் உள்ளதால், உடல் சுறுசுறுப்படையும்.
*ரஸ்தாளி:*
எல்லா வகை வாழைப்பழங்களை போலவே ரஸ்தாளியிலும் சத்துக்கள் உள்ளன.. கைக்குழந்தைகளைவிட, வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம்.. ஏனென்றால், மந்த தன்மையை தந்துவிடுமாம்.
அதனால், வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். ஆனால், ரஸ்தாளியைவிட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தவை பச்சை வாழைப்பழம்.
*பச்சை வாழைப்பழம்* பச்சை வாழைப்பழம், குடல் புண்களை ஆற்றி, அல்சர் போன்ற தொந்தரவுகளை அண்டவிடாமல் செய்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது...
அதேபோல், டயட்டில் இருப்பவர்கள், அல்லது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பச்சை வாழைப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இதில் ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன..
*பொட்டாசியம்:*
பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழமே முக்கிய உதவியாக இருக்கிறது.. அதனால்தான், குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது தர வேண்டும் என்கிறார்கள்.
ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவு சாப்பிடலாம்.
*இதய ஆரோக்கியம்:*
இதய ஆரோக்கியத்திற்கு பச்சை வாழைப்பழத்தை விட பெஸ்ட் வேறில்லை என்கிறார்கள்... அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.. வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், ஆக்ஸிஜனேற்றத்திற்கு பேருதவி புரிகிறது..
அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த பச்சை வாழைப்பழம்.. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது. ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்ற உதவுகிறது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது.
*கொலஸ்ட்ரால்:* அதாவது, பச்சை வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதில் உப்பு, மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க பேருதவி புரியுமாம்.. எனவே, பச்சைவாழைப்பழம் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், மருத்துவர்களை அணுகி ஆலோசனையை பெற்று பலன்பெறலாம்.
No comments:
Post a Comment