Thursday, April 11, 2024

உப்பிலாங்கொடி - தினம் ஒரு மூலிகை


*உப்பிலாங்கொடி.* பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை கொடி உப்பிலாங்கொடி. சிறிய ஓடிய கூடிய இலைகளை எதிர் அடுக்கில் கொண்ட மென்மையான சுற்று கொடி வேலிகளில் தானாகவே வளரும் கொடி வகை சார்ந்தது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது காய்ச்சல் போக்கும் வயிற்றுப் புளிப்பை அகற்றும் இலையை வதைக்கு பிழிந்த சாறு பத்து மில்லியில் இருந்து 20 மில்லி வரை காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் மாந்தம் கழிச்சல் விடா காய்ச்சல் நீங்கும் நூறு கிராம் இலையை பொடியாக நறுக்கி கால் கிலோ பசு நெய்யில் போட்டு ஐந்து நாட்கள் வெயிலில் வைத்து வடிகட்டி மூன்று மில்லி வீதம் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் ஜுரம் கழிச்சல் ஆகியவை தீரும் நன்றி

No comments:

Post a Comment