Thursday, April 11, 2024

காலங்கள் மிக மோசமாக சென்றுக் கொண்டிருக்கிறது

 _

முற்போக்கு என்னும் போர்வையில் ஆபாசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுக்கிறது.*_


_அது குடும்ப பெண்களையும் விட்டு வைப்பதில்லை._


_*படுக்கை அறையில் நான்கு சுவற்றுக்குள் நடக்க வேண்டியதை படம் எடுத்து ஊருக்கு பகிர்கின்றார்கள் நாகரீகம் எனும் போர்வையில்.*_


_அதிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமண தம்பதிகள் Pre-Wedding Photo Shoot என்னும் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் அருவெறுப்பாகவம், ஆபாசத்தின் உச்சமாகவும் பெருகி வருகிறது._


_*திருமணத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை எல்லாம் திருமணத்திற்கு முன்பு முன்னோட்டமாக புகைப்படம் எடுக்கின்றனர்.*_


_கணவன் மனைவியின் அந்தரங்க வாழ்க்கையை மூன்றாவது மனிதனாக கேமரா மேன் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்._


_*முத்தத்தில் ஆரம்பித்த இந்த Pre-Wedding Photoshoot, இப்போது*_ _*மொத்தத்தையும் படம் பிடித்து உலக மக்கள் பார்வைக்கு வியாபாரம்*_ _*செய்யப்படுகிறது என்பது துயரம்.*_

 _*என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைய தலை முறையினரின் பெற்றோர்கள்?*_

No comments:

Post a Comment