வல்லாரை கீரையின் சத்துக்கள் என்னென்ன தெரியுமா? வெறும் வயிற்றில் வல்லாரையை சாப்பிடலாமா? இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் போன்றவை அடங்கியது வல்லாரை கீரை.. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் உதவுவது இந்த கீரையாகும்.. ஹீமோகுளோபின் பிரச்சனை முதல் தோல் அலர்ஜி வரை அனைத்தையும் விரட்டக்கூடியது இந்த வல்லாரைக்கீரை.அனீமியா: அனீமியா உள்ளவர்களுக்கு இந்த கீரையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.. சருமத்துக்கு ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரக்கூடியது.. உடலில் நமைச்சல், எரிச்சல், புண்கள் போன்றவைகளை குணப்படுத்தக்கூடியது இந்த கீரை.. வல்லாரை கீரையை கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வந்தால் இதயநோய் நம்மை அண்டாது.. நினைவாற்றலை பெருக்கக்கூடியது இந்த வல்லாரை.. தொடர்ந்து வல்லாரையை சாப்பிட்டு வருபவர்களுக்கு மனித மூளை நன்றாக செயல்படும்.. கால் நரம்புகள்: கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி வல்லாரை கீரையை சாப்பிட்டு வரலாம்.. பிரசவம் முடிந்த பெண்களுக்கு இந்த கீரையிலிருந்து சாறு தருவார்கள். இதனால், அவர்களின் உடல் வலுவாகும்.. மாதவிடாய் நேரங்களிலும் இந்த கீரையின் சாற்றுடன் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்.
இந்த கீரையுடன் மிளகு, துளசி இலையை சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து, மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டால், காய்ச்சல் நேரத்தில் சாப்பிடலாம்.. இதனால் காய்ச்சல் விரைவில் குணமாகும்.. குடல் ஆரோக்கியம்: வல்லாரை கீரையில் உள்ள சேர்மங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன... அதேபோல, வல்லாரையிலுள்ள வைட்டமின் B6, B1 மற்றும் ஃபோலிக் ஆசிட் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே, வயிறு தொடர்பான பிரச்சனைகள இருந்தாலும், இந்த கீரையை உணவில் கடைந்து சாப்பிடும்போது, நிவாரணம் கிடைக்கும்.
கால்சியம், பொட்டாசியம் வைட்டமின் K, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வல்லாரையில் உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்துகின்றன.. அதுமட்டுமல்ல, ஆஸ்டியோகால்சின் என்ற புரதம், எலும்பு திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.. இந்த வல்லாரை கீரையில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைய உள்ளதால், செல்களின் ஆரோக்கியத்தை சீரான முறையில் பராமரிக்கிறது..
இலைகள்: இந்த வல்லாரை இலைகளை நிழலில் காயவைத்து, பவுடராக அரைத்து, சலித்து எடுத்து கொண்டால் போதும்.. 1 முதல் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தினமும், காலை, மாலை என 2 வேளையும், ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்கலாம்.. அல்லது வெறுமனே 2 வல்லாரை இலைகள் காலையில் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம்,. இதனால் குழந்தைகளின் திறன், நினைவாற்றல், சுறுசுறுப்பு தன்மை பெருகிவிடும். அவ்வளவு ஏன்? பற்கள் சம்பந்தமான நோய்களையும் அண்டவிடாமல் தடுக்கிறது இந்த வல்லாரை பொடி.. அல்லது இலையை வெறுமனே வாயில் போட்டு மென்று தின்றாலே, குடல் புண்களும், வாய்ப்புண்களும் நீங்கிவிடும்.. வயிற்றில் பூச்சிகள் இருந்தால், வல்லாரை பொடியை தூங்கும்முன்பு சாப்பிட வேண்டும். முயற்சிகள்: அதேபோல, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த கீரை, மிகவும் கை கொடுத்து உதவுகிறது.. இதற்கு அரைத்து வெறும் வயிற்றில் பாலிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ வல்லாரை பொடி கலந்து குடித்து வந்தால், ஊளைச்சதை குறைய துவங்கும்.. உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளும் கரைய துவங்குமாம்
No comments:
Post a Comment