Saturday, April 13, 2024

உளுந்து - தினம் ஒரு மூலிகை



 *உளுந்து*.   உளுந்தை தெரியாதவர்கள் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் உணவுப் பொருளாக தான் தெரியும் அதில் உள்ள மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம் உடலுக்கு பலம் தரவும் பால் சுரப்பி காமம் பெருக்கவும் உள்ளழல் ஆற்றவும் மருந்தாக பயன்படுகிறது ஒரு தேக்கரண்டி உளுந்து மாவை தேனில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும் தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு மாவை நீரில் இட்டு பிசைந்து அடையாள சுட்டு பொறுக்க கூடிய சூட்டில் தலையில் வைத்து கட்டி வர ஜுரத்தினால் ஏற்படும் வாய் பிதற்றல் மயக்கம் மூச்சை முதலென தீரும் செடியின் வேரை மையாய் அரைத்து அனலில் கலி போல் கிளறி வீக்கங்களில் வைத்து கட்ட குணமாகும் 100 கிராம் உளுந்தை ஒரு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை கால் லிட்டர் அளவாக சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும் 50 கிராம் பருப்பை ஊறவைத்து அரை லிட்டர் நீரில் ஓர் இரவு ஊற வைத்து அதிகாலை வடிகட்டி பருகிவர சிறுநீர் தொடர்பான நோய்கள் தீரும் நன்றி.

No comments:

Post a Comment