Monday, April 1, 2024

வண்டி எண் - 12083/ 12084 கோவை - மயிலாடுதுறை - கோவை

ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டி


காலை 7.15க்கு 

கோவையில் புறப்பட்டு..

மதியம்(13.50) 1.50க்கு 

மயிலாடுதுறை வந்தடையும்


கோவை -  (காலை)  07:15

இருகூர் -                     07:29.                 

திருப்பூர் -                     07:53.               

ஈரோடு                   - 08:38.                  

கரூர்                        - 09:28.                      

திருச்சி (முற்ப்பகல்) 10:50.                  

தஞ்சாவூர் -                  11:48.            

பாபநாசம் -                  12:11.             

கும்பகோணம் -          12:23.     

மயிலாடுதுறை -  மதியம்  13:50.   


மதியம் (14.50) 2.50 க்கு

மயிலாடுதுறையில் புறப்பட்டு

இரவு (21.15) 9.15 க்கு 

கோவைக்கு வந்தடையும்...


மயிலாடுதுறை -.மதியம் 14:50

கும்பகோணம் -.                 15:16

பாபநாசம் -                          15:29

தஞ்சாவூர் -      மாலை      15:53

திருச்சி -                               16:45

கரூர் -                                    17:18

ஈரோடு -                                18:23

திருப்பூர் -          இரவு        20:03

இருகூர் -                              20:29

கோவை -               இரவு .  21:15


தமிழ்நாட்டில் ஒடும் ஏழைகளின் சொகுசு ரயில். 


ஆனால் பொதுமக்கள் இன்னும் இந்த ரயிலைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். 


பொதுவாக கோவையில் இருந்து சிதம்பரம் சீர்காழி தஞ்சாவூர் மயிலாடுதுறை காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு செல்ல மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் உள்ளது.


அதிலும் மிக நீண்ட தூரம் பேருந்தில் செல்வதால் கடுமையான உடல் சோர்வு ஏற்படும். கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 500க்கும் மேல் வரை உள்ளது. 


ஆனால் சாமானிய மக்கள் இந்த ரயிலைப் பற்றி அறியாத காரணத்தால் இன்னும் பேருந்தில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.  


நமக்காக பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஏழைகளின் ரதம், மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 100 பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் இது வெறும் ஆறு மணி நேரத்தில் மயிலாடுதுறை சென்று அடைந்து விடும். கோவையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில் களில் இது தான் முதன்மையானது.


கோவையில் இருந்து திருச்சிக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் இந்த ரயிலை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் காரணம் வெறும் நான்கு மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடும்.


சொகுசான இருக்கைகள். கழிப்பறை வசதி நேரமும் மின் விசிறிகள் மற்றும் தென்றல் காற்று மூலம் குளு குளு பயணத்தை அனுபவிக்கலாம்.


மேலும் நியாயமான விலையில் தண்ணீர் பாட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அனைத்தும் ரயில்வே மூலம் உள்ளேயே கிடைக்கிறது. 


இவ்வளவு வசதிகளும் வெறும் 170 ரூபாய் மட்டுமே. அட ஆமாங்க இந்த ரயிலில் கட்டணம் வெறும் 170 ரூபாய் மட்டும்தான். 


முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதால் மிகவும் தூய்மையாக இருக்கும். 


இந்த ரயிலில் பயணிக்க முன்கூட்டியே நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்


கடைசி நேரத்தில் பயணிக்கக்கூடியவர்களுக்கும் ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. 


மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மதியம் 2 மணி வரை இந்த ரயிலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கிறது.

No comments:

Post a Comment