கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா?
வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்கிய மருந்தாகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த கிராம்புவை தவிர்க்க கூடாது. ஏனென்றால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலைக்கு கொண்டுவருகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகளும் பரிந்துரை செய்கின்றன.
கல்லீரல்; உடல் கழிவுகளை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு அதிக பங்கு உள்ளது. எனவே, இந்த கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை தழைக்க செய்கிறது. அந்தவகையில், வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாக்கப்படும். கிராம்பு தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை.. கிராம்பு நீரை கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்தால் அத்தனையும் மருந்தாகும்.. இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்புடன் வெந்நீர் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்..
நரம்பு மண்டலம்: கிராம்பு சிறிது எடுத்து, தண்ணீல்ல் 20 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி சூடு ஆறவைத்து குடித்தாலே ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும். கிராம்பு தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைவதுடன், நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அஜீரண கோளாறு நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனை சீராகிறது.
காது வலி உள்ளிட்டவை இருந்தாலும் தீர்ந்துவிடும். கை கால் நரம்புகள் இழுப்பது போன்ற தொந்தரவு இருந்தால், இரவில் வெந்நீருடன் கிராம்பு சாப்பிடலாம். இதனால், வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்க செய்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளன. இது வாயிலுள்ள பாக்டீரியாக்களை நெருங்க விடுவதில்லை.. பல்சொத்தை, ஈறு தொடர்பான நோய்களையும் விரட்டியடிக்கிறது. எனவேதான், டூத்பேஸ்ட்கள் தயாரிப்பதில் கிராம்பு முக்கிய மூலப்பொருளாகிறது. கிராம்பு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகிறது.
தலைமுடி வளர்ச்சி: கிராம்பு தண்ணீரை முகத்துக்கு பயன்படுத்துவதால், அரிப்பு, எரிச்சல், அலர்ஜி நீங்கி சருமத்தின் நிறமும் அதிகமாகும்.. கிராம்பு தண்ணீரை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்.. இதனால் தலைமுடி உதிர்வு குறையும்.. காரணம், கிராம்பு பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், அதிலுள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செய்யும்.. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தடுப்பதற்கு உதவுகிறது.