Thursday, April 4, 2024

செய்தித் துளிகள் - 04.04.2024 (வியாழக்கிழமை)


🌈🌈பெண் ஆசிரியர்களுக்கு பணி புரியும் தொகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நீண்ட கால கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையரிடம் உரிய நேரத்தில் கோரிக்கை 

வைத்து அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையத்தால் பெற்ற

 மாநில,மாவட்ட மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள், மன்றத்தின் மறவர்,மறத்தியர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

🌅🌅மாணவ/ மாணவிகளுக்கு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு துறை உறுப்பினர்கள் சீருடை அளவெடுக்க வரும்போது அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க இயக்குனர் உத்தரவு.

🌅🌅CBSE கல்வி வாரியத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.4.2024

🌅🌅பிளஸ் 2 வேதியியல் தேர்வு - தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு

🌅🌅அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி ஏற்படுத்துதல் - one time charge (Installation Charges) பள்ளிகளுக்கு விடுவித்தல் -Proceedings வெளியீடு.

🌅🌅பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பணி நீட்டிப்பு வழங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🌅🌅ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால், புதிய நடைமுறைகளைப் பின்பற்ற பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு உத்தரவு.

🌅🌅பிளஸ் 2 வேதியியல் தேர்வு - தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு

🌅🌅தமிழக அரசு பாக்கி வைத்துள்ள கல்வி கட்டணத்தை தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

🌅🌅அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்: ஏப்.12-க்குள் 4 லட்சத்தை எட்ட இலக்கு...

🌅🌅பிரசாரத்தில் பள்ளி மாணவர்கள் - கடும் நடவடிக்கை

"பள்ளி மாணவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது உண்மை தான் என கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை

🌅🌅சிஇஓ - டிஇஓ அலுவலகங்களை காலி செய்க"

👉தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும்  சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு

👉பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்றவும் உத்தரவு

🌅🌅ஜப்பானியத் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை:

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஜப்பானியத் தீவுகளான மியாகோ, யேயாமா தீவுகளிலும், ஒகினாவாவில் 3 மீட்டர் (9.8 அடி) வரையும் சுனாமி ஏற்படும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

நிலநடுக்கத்தின் காரணமாக தைவானில் சுரங்க ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

🌅🌅மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ள இருந்த அனைத்து பிரசார பயணங்களும் ரத்து. (அதாவது ஏப்.4 & 5-ம் தேதிகளில் திட்டமிட்டிருந்த பரப்புரை கூட்டங்கள் ரத்து என அறிவிப்பு)

🌅🌅இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய குழுவை  அனுப்புகிறது Tesla நிறுவனம். 

தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து தேர்வுக் குழுவை அனுப்ப முடிவு.

🌅🌅அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கான விசா பெறுவதற்காக வங்கதேசத்துக்கு புறப்பட்டிருக்கிறார் முஸ்தபிஸூர் ரஹ்மான்.இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தகவல்.

🌅🌅மொபைலில் பணம் செலுத்தலாம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்.

🌅🌅"3 சட்டமன்ற தொகுதிக்கு, ஒரு நாடாளுமன்ற தொகுதியை கொண்டுவர வேண்டும்"

"பெண்களுக்கான தொகுதியை ஒதுக்க வேண்டும்"

"மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தான் அதிகாரம் வழங்க வேண்டும்"

"மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மாற்றம் கொண்டு வர வேண்டும்"

சீமான்.

🌅🌅"ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது"

"மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன்"

"சாதியம் தான் எனது எதிரி, எனது வாழ்வில் சாதிக்கு இடமில்லை"

"மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திருமாவளவன்"

"பெருஞ்சிறுத்தை எனது தம்பி திருமாவளவன்"

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை

🌅🌅மண்ணச்சநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்

"தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்"

"பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான வசதிகளை கண்டிப்பாக செய்து கொடுப்பேன்"

"இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்"

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🌅🌅டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்.7ல் ஆம் ஆத்மி உண்ணாவிரதம் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஏப்ரல் 7ல் ஆம் ஆத்மி உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

🌅🌅மீண்டும் உச்சம் தொட்ட தமிழ்நாட்டின் மின் நுகர்வு

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 430.13 மில்லியன் அலகுகளை தொட்டுள்ளது.

முந்தைய அதிகபட்சமாக மார்ச் 29ல் மின் நுகர்வு 426.44 மில்லியன் யூனிட்டாக இருந்தது.

🌅🌅"புதிய நடைமுறையால் தவறு ஏற்பட வாய்ப்பு"

வரும் மக்களவை தேர்தலுக்கு புதிய சரத்தை  தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறையை பின்பற்ற வேண்டும் 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

🌅🌅மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்

எல். முருகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்

🌅🌅வெள்ள நிவாரணம் - தமிழக அரசு வழக்கு

வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் செவ்வாய்க்கிழமை  வேலூர் பிரசார கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்

வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🌅🌅தமிழகத்தில் ஏப்.12ல் ராகுல்காந்தி பிரச்சாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏப்.12ல் தமிழகத்திலுள்ள நெல்லை, கோவையில் பிரசாரம் 

முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் ராகுல்காந்தி

🌅🌅அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று மாலை ஆலோசனை...

🌅🌅தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,500க்கும், ஒரு சவரன் ரூ.52,000க்கும் விற்பனை

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு 

ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

👉1. ஏப்ரல் 12-க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile-ல் PAN Number update செய்ய வேண்டும்.

👉2. PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20% Income Tax பிடித்தம் செய்யப்படும்.

👉3. அனைத்து பணியாளர்களும் TDS பிடித்தம் முறை Old Regime அல்லது New Regime என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

👉4. களஞ்சியம் Mobile App அல்லது களஞ்சியம் மென்பொருளில் Employee Self Service ஆகிய இரண்டு வழிகளில் பணியாளர்கள் option-ஐ தேர்வு செய்யலாம்.

👉5. ஏப்ரல் 12-க்குள் Income Tax Option-ஐ தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தானாகவே New Regime தேர்வு செய்யப்படும்.

👉6. Old Regime தேர்வு செய்த பின்பு பணியாளர்கள் தங்களது declaration-ஐ (Savings மற்றும் Expenses) Self Service-ல் கொடுக்க வேண்டும்.

👉7. Initiator தங்களது அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் Initiator id -ல் Option-ஐ தேர்வு செய்யலாம் மற்றும் Declaration work ஆகியவற்றை செய்ய இயலும். Intiator-ன் Employee Self Service portal-லில் இதனை செய்யலாம்.

👉8. ஒவ்வொரு மாதமும் Payroll Run-க்கு முன்னதாக Declaration-ஐ மாற்றிக்கொள்ளலாம்                       👉9. Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10-ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

👉10. அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல் IT கூடுதலாக பிடித்தம் செய்யப்படும்.

👉11. அனைத்து பணியாளர்களும் தங்களது Income Tax Projection Report-ஐ Employee Service --> Reports --> Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment