Thursday, April 4, 2024

பிரண்டை துவையல்

பிரண்டை கொழுந்து கைபிடி

மிளகு பொடி தேவையான அளவு

உரித்த பூண்டுபல் 3

உப்பு தேவையான அளவு

கடுகு கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை தேவையான அளவு

சிறிய வெங்காயம் 2

மல்லி அரை தேக்கரண்டி

குடம்புளி தேவையான அளவு

உளுந்தம்பருப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: பிரண்டை நுனிக்கொழுந்து பகுதிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ,பிரண்டை துண்டுகள்,குடம்புளி, உளுந்தம்பருப்பு, பூண்டு,மல்லி, மிளகுபொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கியதும் சூடு ஆறவிட்டு சிறதளவு நீர்,உப்பு சேர்த்து  மிக்ஸியில் அரைத்து  வைத்து  பின் ஒரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையல் சேர்க்கவும். தயாரான  பிரண்டை துவையலை காலை உணவில் சட்னியாக தொட்டுக் கொள்ளவும். மதியம் சூடான சாதத்தில் பிரண்டை துவையலுடன் உருக்கிய பசு நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட எலும்புகள் வலுவடையும்.

No comments:

Post a Comment