Wednesday, April 10, 2024
நாளும் ஒரு சிந்தனை!! - 10/04/2024
நாளும் ஒரு சிந்தனை!!
எதற்கெல்லாம்
சினம் வருகிறதோ
அதற்கெல்லாம்
புன்னகைக்க
கற்றுக் கொள்ளுங்கள்..!
வாழ்க்கை இனிமையாகும்..!
நாளும் ஓரு வீட்டு சிந்தனை :-
நாளும் ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் நம் உடலிலுள்ள குருதியோட்டம் தூய்மையாகும்.. இருமல், சளி நீங்கும்.
நாளும் ஒரு செய்தி
மஞ்சள் கிழங்குடன் சிறிது திருநீறு சேர்த்து வைத்தால் வெகுநாட்களானாலும் கெடாது.
நாளும் ஒரு சமையல் குறிப்பு :-
சேனைக்கிழங்கை (கருணைக்கிழங்கு) வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு அது வெடிக்கும் வரை வறுத்து, பின்பு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கிழங்கை போட்டால், கிழங்கு விரைவில் வெந்து விடும். மென்மையாகவும் இருக்கும்.
நாளும் ஒரு பொன்மொழி :-
நல்ல சொற்களை பேசத் தெரியாதவன் ஊமை; நல்லவற்றை கேட்காதவன் செவிடன்.
-ஆதி சங்கரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment