Friday, April 5, 2024

சிறிது காலம் இந்த உலகத்தைப் பற்றி மறந்து விடுங்கள்

முழுக்க முழுக்க உங்களைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்._


உங்களை மெருகேற்றுங்கள்.

புதிய விசயங்களில் உங்களைப் புகுத்திக் கொள்ளுங்கள்


உங்களுக்கு பிடித்ததை தைரியமாக செய்யுங்கள்.

முதலில் நீங்கள் பயப்படுவதை துணிந்து செய்யுங்கள்.

பயிற்சி, முயற்சி, தோல்வி.

பயிற்சி, முயற்சி, தோல்வி.


இதுதான் சிறிது காலம்

உங்கள் தாரக மந்திரமாக இருத்தல் வேண்டும்.


எந்த அளவுக்கு நீங்கள்

தோல்விகளைக் காண்கிறீர்களோ,

அந்த அளவுக்கு நீங்கள் உங்களை சிறப்பானவனாக மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.


உங்களைச் சுற்றி

நடப்பவற்றை கருத்தில் கொள்ளாதீர்கள்.


நீங்கள் சிறப்பானவராக மாறாமல், பிறருக்கு உதவி புரிவது அல்லது அறிவுரைகள் கூறச் சென்றால், உங்கள் மீது பல கேள்வி அம்புகள் தொடுக்கப்படும்.


நிதானத்திற்கு_

எடுத்துக்காட்டாக இருங்கள்.


எதிர்க்கருத்தை மனமுவந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆனால் அதற்காக

எதையும் திருப்பித்தர முயற்சிக்காதீர்கள்.

முடிந்தவரை மௌனம் காத்தல் சிறந்தது.


ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து,

அதில் முதலில் சிறப்பானவனாக

மாற முயற்சி செய்யுங்கள்.


இறுதியில் இந்த உலகம் உங்களை திரும்பிப் பார்க்கிறதோ இல்லையோ, ஒரு சில விசயங்களை நாம் நம் வாழ்க்கையில் மேற்கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கு ஏற்படும். அப்பொழுது இந்த உலகத்தையே நீங்கள் திரும்பிப் பார்க்க மாட்டீர்கள்.


ஒருவேளை இவை அனைத்தையும் நீங்கள் சிறப்பாகச் செய்து வரும்_ பட்சத்தில் உங்களுக்கான

இடம் நிச்சயம் கிடைக்கும். கண்டிப்பாக இந்த உலகம் உங்களைத் திரும்பிப் பார்ப்பது மட்டுமல்லாமல்,

தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடவும் செய்யும்


உச்சத்தில் இருக்கும் போது யாவரும் உங்களை விரும்புவர்.

ஆனால் வாழ்வில் சூறாவளி போன்று சோதனைகள் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் தான் உங்களுக்குத் தெரியும்,

உண்மையாக உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டோர் யார் என்று.


 ஆலோசனை என்பது அனுபவப் பகிர்வு...

அறிவுரை என்பது நாம் செய்யாததை அடுத்தவர்க்குக் கூறுவது.

அனுபவம் என்பது தவறுகளை திருத்திக்கொள்வது.


ஆணவம் என்பது தவறுகளை நியாயப்படுத்துவது.

ஆணவம் வாழ விடாது.

அனுபவம் வீழவிடாது.


படித்ததை பகிர்கிறேன்.

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அ👇🏻👇🏻👇🏻


No comments:

Post a Comment