Thursday, April 4, 2024

உதவி செய்ய முதலில் எண்ணம் வேண்டும்!

ஒரு வயதான விவசாயி தனது நிலத்தை தானே உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்தார். 


முதிர்ச்சி காரணமாக அவரால் தனது வயலை உழுது பயிரிட முடியவில்லை. அவரது மகனோ குற்றம் செய்து சிறைத்  தண்டனை அனுபவித்து வருகிறான். 


உதவிக்கு ஆள் இன்றி வருத்தப் பட்டார் வயது முதிர்ந்த விவசாயி.


அந்த நேரத்தில் அவரது மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 


அதில் தானும், நண்பர்களும் கொள்ளை அடித்த பணங்கள், நகைகள் ஆகியவற்றை நமது நிலத்தில் புதைத்து வைத்துள்ளேன். 


நீங்கள் சிரமப் பட்டு நிலத்தை உழுது பயிரிட வேண்டாம் என்று எழுதியிருந்தான். 


மகன் தனக்கு உதவி செய்ய வில்லை என்றாலும், என்னையும் வேலை பார்க்காதே என்று சொல்லி

விட்டானே என்று வருத்தப் பட்டார். 


ஐந்து நாள்கள் கழித்து சிறை அதிகாரிகள் இயந்திரங்களோடு, அவரது நிலத்திற்கு வந்து உழுதும்,

தோண்டியும் பார்த்தனர்.

எதுவும் கிடைக்கவில்லை.


பெரியவர் நீங்கள் யார்? என் நிலத்தைத்

தோண்ட ? என்று கேட்டவுடன், நாங்கள் சிறை அதிகாரிகள்,

கைதிகளின் கடிதங்களைப்

படித்துப் பார்த்த பின்னர் தான் அனுப்பி

வைப்போம். 


உங்கள் மகன் கொள்ளையடித்த பொருட்களை மீட்டுக் கொண்டு போகவே நாங்கள் வந்தோம் என்றனர். 


சில நாட்கள் கழித்து மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நான் முன்பு எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த காரணத்தால் தான், சிறை அதிகாரிகள் நமது நிலத்தை உழுது தேடினார்கள்.


நான் ஒன்றும் பொருட்களை அங்கே புதைக்கவில்லை. என்னால் வெளியே வந்து உங்களுக்கு உதவ முடியவில்லை. அதனால் தான் நான் அப்படிக் கடிதம் எழுதினேன். 


இப்பொழுது நமது நிலத்தைச் சிறை அதிகாரிகள்  நன்கு உழுதுள்ளார்கள். 


நீங்கள் இப்பொழுது பயிரிடுங்கள். நான் விடுதலையாகி வந்த பின்பு உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று கடிதத்தில் எழுதியிருந்தான் மகன். 


இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, ஒருவர் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் எங்கிருந்தாலும் உதவலாம். அதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தான் முக்கியம் வேண்டும். 


மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே!



🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

No comments:

Post a Comment