*இண்டு* கூட்டு இலைகளையும் கூறிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறுகொடி தானாக வளரக்கூடியது இலை தண்டு மருத்துவ பயன் உடையது உடல் வெப்பத்தையும் நாடி நடையையும் கோழை அகற்றும் ஆகிய மருத்துவ குணம் உடையது இதன் தண்டை துண்டு துண்டாக நறுக்கி ஒருபுறம் வாயில் வைத்து ஊத மறுபுறம் சாறு வரும் அந்த சாற்றை 15 மில்லி எடுத்து திப்பிலி பொடி பொரித்த வெங்காரம் வகைக்கு ஒரு கிராம் சேர்த்து காலை மாலை மூன்று நாட்கள் கொடுக்க இலை இருமல் குணமாகும் இந்த மருந்தை ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு கொடுக்க சளி மாந்தம் குணமாகும் இதன் இலை சங்கிலை தூது வேலை திப்பிலி சுக்கு வகைக்கு 20 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி கால் லிட்டராக ஆக்கி அதில் 100 மில்லியாக காலை மாலை சாப்பிட இருமல் தீரும் நன்றி
No comments:
Post a Comment