Friday, April 5, 2024

ஆடாதொடை - "ஆயுள் மூலிகை"



சளி, காய்ச்சல், உட்பட சுவாச கோளாறுகளை போக்க மிகச்சிறந்த மூலிகை ஆடாதொடை இலைகளாகும்.. இதற்கு "ஆயுள் மூலிகை" என்றே சொல்கிறார்கள். ஏன் தெரியுமா?

எந்த இலைகளையுமே விரும்பி சாப்பிடும் ஆடுகள், இந்த இலையை மட்டும் தொடாமல் விட்டுவிடுமாம். அதனால்தான், இதற்கு ஆடுதொடா இலை என்று பெயர் வந்ததாம். பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே மருந்தாகின்றன. அதனால்தான்., சித்த மருத்துவத்தில் இந்த செடியினை அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.

மிகச்சிறந்த மூலிகையான ஆடு தொடா இலைகள், நம்முடைய நுரையீரலை காக்கக்கூடியது.. இதற்கு முக்கிய காரணம், வாசிசின் என்ற வேதிப்பொருள் இந்த இலையில் அடங்கியிருக்கின்றன. அதனால்தான், இருமல் மருந்துகள், இந்த ஆடாதொடையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

சுவாச கோளாறுகள்: எனவே, சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற சுவாச கோளாறுகளுக்கு, இந்த ஆடாதொடை இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால், காய்ச்சல் மெல்ல மெல்ல குறைய துவங்கும்..

ஆடாதோடை இலைகள், வேப்பிலையை போல கசப்பு தன்மை வாய்ந்தவை.. ஆனால், வேப்பிலையை போலவே, பல நன்மைகளை தரக்கூடியவை. இந்த இலைகளை வெறும் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால், நம்முடைய வயிறு சுத்தமாகும்.. வயிற்றிலுள்ள பூச்சிகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்

வெள்ளைப்படுதல் : பெண்களுக்கு இந்த இலைகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. முக்கியமாக, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடித்து இலையை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரும்போது, உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.

அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு இந்த செடியின் வேர்களிலிருந்து கசாயம் போல தயார் செய்து, 8வது மாதம் முதல் குடிக்க தருவார்கள்.. இதை குடித்து வரும்போது, கருப்பை பலப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது..

ரத்த கொதிப்பு: ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், இந்த மூலிகை இலையை பவுடர் போல அரைத்து குடிக்கும்போது, தவறவிடக்கூடாது.. இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரை, 3 வேளையும், ஒரு ஸ்பூன் வீதம், 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால், ரத்த அழுத்தம் சீராகும். அத்துடன், நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை இப்படி அனைத்துமே நீங்கிவிடும்.

No comments:

Post a Comment