Saturday, April 6, 2024

இலந்தை - தினம் ஒரு மூலிகை

 


*இலந்தை.* ஏழைகளின் கனி இலந்தை வறட்சியான இடங்களில் தானாக வளரும் புளிப்பு இனிப்பு சுவையுடைய உண்ணக்கூடிய பழ மரம் இலந்தை இதன் இலை பட்டை வேர் பட்டை பழம் மருத்துவ குணம் உடையது இலை தசை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் வேர் பட்டை பசி தூண்டியாகவும் சளி அகற்றி மலமிளக்கியாகவும் பசி தூண்டியாகவும் பயன்படும் இலை ஒரு பிடி மிளகு 5 பூண்டு பல் 5 அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் கொடுக்க கருப்பை குற்றங்கள் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும் இலந்தை பட்டை 40 கிராம் மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 125 மில்லியாக நான்கு வேளை நாள்தோறும் குடித்து வர நாள் பட்ட பெரும்பாடு தீரும் இலங்கை வேர் பட்டை சூரணம் நாலு சிட்டிகை இரவில் வெந்நீரில் உட்கொள்ள பசியின்மை நீங்கும் துளிர் இலையை 10 கிராம் மைய அரைத்து தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு ரத்த பேதி நீங்கும் எலும்பு பலம் இல்லாதவர்கள் இலந்தைப் பழம் சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும் நன்றி

No comments:

Post a Comment