Tuesday, May 7, 2024

காட்டவுரி(அ)நீலி - தினம் ஒரு மூலிகை

 


*காட்டவுரி(அ)நீலி* கரும்பச்சை இலைகளை உடைய சிறு செடி நீல நிறச் சாறு உடையது இதனால் நீலி என பெயர் உண்டு எல்லா பாஷாணங்களையும் சுத்தி செய்ய வல்லது இலை வேர் மருத்துவ பயன் உடையது வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும் இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும் அவுரி இலையை கொட்டைப்பாக்கு அளவு அரைத்து 250 மில்லி வெள்ளாட்டு பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை அந்தி மாலை தீரும் அவுரி வேர் 20 கிராம் அருகம்புல் 30 கிராம் மிளகு 3 கிராம் மையாய் அரைத்து புன்னகை அளவு காலை மாலை சாப்பிட்டு இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும் இம்மருந்தை நாள்தோறும் மூன்று வேளை உப்பு புளி நீக்கி சாப்பிட பாம்பு தேள் பூரான் செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும் வேர் 30 கிராம் பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.

நன்றி


No comments:

Post a Comment