Sunday, May 5, 2024

இன்றைய நாளில் பிறந்த மாமேதைகள் (05-மே)


*கார்ல் மார்க்ஸ்.*

✍ உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கின்ற மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பிரஷ்யாவிலுள்ள ட்ரையர் நகரில் பிறந்தார்.


✍ இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கருதப்படுபவர்.


✍ பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும், கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்துள்ளது.


✍ பொதுவுடைமைக் கொள்கைகளின் முக்கியமானவர்களுள் ஒருவரான கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மறைந்தார்.


*டி.எஸ்.அவிநாசிலிங்கம்.*

👳 சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ்.அவிநாசிலிங்கம் 1903ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி திருப்பூரில் பிறந்தார்.


👳 1970ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருதும், ஜி.டி. பிர்லா விருதும் வழங்கப்பட்டது.


👳 சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார், 1991ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 88வது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment