Saturday, May 4, 2024

செய்தித் துளிகள் - 4.05.2024 (சனிக்கிழமை)

⛑️⛑️கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

👉பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதில் TNPSC குளறுபடி.

👉4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி, மாற்றியமைப்பட்ட

பட்டியலை வெளியிட உத்தரவு.

👉பணியாற்றி வரும் 4 அதிகாரிகளுக்கு சிக்கல்.                                                   ⛑️⛑️(NSNOP) நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்தல் - நிதி விடுவித்தல் சார்ந்து - Proceedings வெளியீடு.

⛑️⛑️அரசு பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி - SPD & DSE இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️கடந்த பொது மாறுதலில் ஆணை பெற்று பணியில் சேராமல் உள்ள 105 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக புதிய பணியிடத்தில் சேர உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்

⛑️⛑️6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க கோரிக்கை

⛑️⛑️தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

⛑️⛑️பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே 5 முதல் தொடங்க வாய்ப்பு

⛑️⛑️12 ( BRTEs) ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செயல்முறைகள் - இணைப்பு  BRTEs பட்டியல் வெளியீடு.

⛑️⛑️கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

⛑️⛑️ஜூன் 10ஆம் தேதி தனியார் பள்ளிகள் திறப்பு:-

👉மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளிவைத்துள்ளன.

👉வழக்கமாக ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அட்மிஷன் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉அதே நேரம், அரசு பள்ளிகளுக்கு பள்ளித்திறப்பு தேதி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

⛑️⛑️இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

⛑️⛑️தஞ்சாவூர் பெரிய கோயில் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை

⛑️⛑️தமிழ்நாட்டில் மே 6 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் 

⛑️⛑️வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஓட்டினால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது - வாகனங்கள் தீவிர கண்காணிப்பு 

⛑️⛑️சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரம் மாதம் மட்டும் சுமார் 80.87 லட்சம் பேர் பயணம் செய்ததாக அறிவிப்பு 

⛑️⛑️புராதான சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறையின் கடமையாகும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

⛑️⛑️நீலகிரியில் வரலாறு காணாத வெப்பம் - கோடை விழாவை ரத்து செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை 

⛑️⛑️கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்

⛑️⛑️97.76 சதவிகித ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்

⛑️⛑️டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

⛑️⛑️தனியார்மயமாக்கல் மூலமாக தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை மத்திய அரசு பறிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

⛑️⛑️துபாயில் மீண்டும் கனமழை - பிற நாடுகளுக்கு செல்லக்கூடிய 15 விமானங்கள் ரத்து

⛑️⛑️உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. 

கேரளாவின் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2வது தொகுதியாக ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்

⛑️⛑️தங்கம் விலை குறைவு:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 குறைந்து ₹52,920-க்கும், 1 கிராமுக்கு ₹100 குறைந்து ₹6,615-க்கும் விற்பனையாகிறது.

⛑️⛑️கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க 1 ரூபாய்க்கு  ஆவினில் மோர் வழங்க வேண்டும்

மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்

-கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

⛑️⛑️தமிழகத்தில் வரும் மே 6ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும்

அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் கோடை மழை பெய்யக்கூடும்

சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.

⛑️⛑️கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவடைய அதிக நாட்கள் ஆகும் பட்சத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம் - உச்சநீதிமன்றம்.

⛑️⛑️நீலகிரி வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: 

நீலகிரி மாவட்ட பதிவெண் (TN 43) கொண்ட வாகனங்கள் உதகை செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை; மே 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

⛑️⛑️சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

⛑️⛑️தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

⛑️⛑️விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்.

⛑️⛑️இந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்

⛑️⛑️திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை

👉திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.101.63 கோடியை செலுத்தியுள்ளனர்.                         👉திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்தில் 20.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

⛑️⛑️என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது:

👉முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

👉என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

👉நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று சாதனை படைத்தவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

⛑️⛑️இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அறிவிப்பு

⛑️⛑️எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையம் மூடல்

⛑️⛑️மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிா்வாகிகள் குழுவில், மகளிருக்கு 3இல் 1 பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிா்வாகிகள் குழுவில் 3 இடங்களும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் ஒரு இடமும் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

வரும் 2024-25 வழக்கறிஞர் சங்கத் தோ்தலில், பொருளாளா் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள்:-

👉சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை சீக்கிரம் போக்கலாம்.

👉அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.

👉அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.

👉மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.

👉உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.

👉உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

👉பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹அக்னி நட்சத்திரம்: விழிப்போடு இருங்கள்...

⛑️இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குகிறது. ஒரு மாதம் நீடிக்கும் இந்த வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இக்காலத்தில் கவனமாக இருக்குமாறு செய்திக்கதிர் கேட்டுக் கொள்கிறது.

👉வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை  மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

👉நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

👉ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர்,  கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்... இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

👉அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். 

காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். 

முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். 

மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

👉வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.

👉உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம். 

👉மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

No comments:

Post a Comment