Monday, May 6, 2024

செய்தித் துளிகள்* 06.05.2024( திங்கட்கிழமை)

 📕📘தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதாவது காலை 9.30 மணியளவில் வெளியாகிறது.

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்

EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

📕📘அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

📕📘புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரூ.1 கூட முன்பணம் பெற முடியாது - நிதிச்செயலர் பதிலால் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொதிப்பு 

(நாளிதழ் செய்தி)

📕📘மருத்துவ காப்பீடு முறைகேடு போராட ஆசிரியர்கள் முடிவு.

📕📘கற்றல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளில் இணைய வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்.!

📕📘பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி: அஞ்சல் துறை நடத்துகிறது.

📕📘குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4

உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

(Tnpsc Annual Planner)                                 📕📘18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - 4 வார காலத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் ஆணை.

📕📘வரும் மே-7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

📕📘காயம் காரணமாக சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பதிரனா இலங்கைக்குத் திரும்பவிருப்பதாக சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

📕📘தோனி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால்தான் அவர் விக்கெட்டை வீழ்த்திய பின் பெரிதாக கொண்டாடவில்லை.

-பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்ஷல் பட்டேல் 

📕📘நாடு முழுவதும் 3ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது.

அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 94 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

📕📘பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்.

📕📘தோனி நம்பர் 9-ல்தான் களமிறங்கப் போகிறார் என்றால் அவருக்கு பதிலாக ஒரு பவுலரை அணியில் எடுக்கலாம். உங்களால் முன்வரிசையில் பேட்டிங் ஆட முடியாது என்றால் போட்டியில் விளையாடாமலேயே இருக்கலாம்!  

-ஹர்பஜன் சிங்

📕📘ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்


👉வாதம் தானே வயிற்றில் இருந்து தோன்றி பலவீனமான இடங்களில் திரிந்து வலியை உண்டு பண்ணும்.. தனக்கு வரும் நோய்களை இது குணமாகாது இது முற்றிவிடும் என கற்பனை தானே நாட்பட்ட நோய்களாக மாற்றிவிடுகிறது.. எனது தனித்துவமான நோய்க்கு தனித்தன்மையான மருந்து மருத்துவம் என தேடி தேடியே நோய் முற்றி விடுகிறது பலருக்கு.. எளிமையான மருந்துகளையும் வாழ்வியல் முறைகளையும் மக்கள் கண்டு கொள்வதில்லை.

👉நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட்ட இந்த பெண்மணிக்கு சொன்ன வீட்டு வைத்தியம் 

👉விளக்கெண்ணெய்- 10மி

👉வெள்ளைப் பூண்டு- 1பல்  நசுக்கியது

👉வறுத்த பெருங்காயம்- ½சிட்டிகை

இதை ஒன்றாக கலந்து இரவு எட்டு மணிக்கு தயார் செய்து வைத்து விட வேண்டும்.. 

👉காலை எழுந்தவுடன் 7:00 மணிக்குள் இதை குடிக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்துக் கொள்ளவும்.. அந்த நாள் இரண்டு மூன்று தடவை மலம் போகும்..( அன்றைய தினம் அசைவ உணவு எண்ணெயில் பொரித்த உணவு பேக்கரி உணவு தவிர்க்க வேண்டும்) கூடவே திரிந்த காற்று வாதம் எல்லாம் வெளியேறி உடல் வலி இடுப்பு வலி குணமாகும்.

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி


👉வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:

👉இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

🌹👉வசதிகள்:

👉சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.

🌹👉நேரம்:

👉இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.

🌹👉கூடுதல் விவரங்களுக்கு:

👉தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

🌹👉முழுமையான விவரங்களுக்கு:

 இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம்.

No comments:

Post a Comment