Tuesday, May 7, 2024

மசாலா டீ செய்வது எப்படி???? 👇👇👇

𝗠𝗮𝘀𝗮𝗹𝗮 𝗧𝗲𝗮

தேவையான பொருள்கள்:


டீ தூள் - மூன்று தேக்கரண்டி


சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது 


துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி


மிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது


 மிளகு - ஒன்று


பட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது 


பட்டை - ஒரு சின்ன துண்டு


கிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை 


அல்லது கிராம்பு - ஒன்று


ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை 


அல்லது ஏலக்காய் - ஒன்று


தண்ணீர் - மூன்றரை டம்ளர்


செய்முறை:


🍁பொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.


🍁மூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும்.


🍁கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும். பிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.


🍁இப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். மசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.


🍁இல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.


🍁டயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம்.


🍁இந்த டீ ஒரு முறை குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.☕

No comments:

Post a Comment