Sunday, December 24, 2023

காலம் கடந்த பின்னே தேடியது கிடைத்து என்னபயன்?



மனிதர்கள் ஆசையின் காரணமாக பலவற்றைத் தேடுகிறார்கள்.
எனவே தேடல்கள் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லலாம்.
சிலருக்கு தேடியது கிடைத்து விடும். சிலருக்கு தேடியதை தவிர்த்து வேறு ஏதாவது கிடைக்கும்.
பொதுவாகபலருக்கும் தேடியது கிடைக்காது என்பது பொது விதியாக இருந்தாலும்
மிகச்சிலருக்கு எதுவுமே கிடைக்காமலும் போகக் கூடும்.சார்லி சாப்ளின் ஒருமுறை கூறினார்: நான் முகம் பார்க்கும் கண்ணாடி தான் என்னுடைய உற்ற நண்பன் என்றார். ஏன் என்று அவரிடம் கேட்டபொழுது பதில் சொன்னார், இப்படி "நான் அழும்போது,
கண்ணாடியின் பிம்பம் என்னைப் பார்த்து சிரிப்பதில்லை மாறாக தானும் சேர்ந்து என்னோடு அழுகிறது என்றார். எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த பிரபல சிரிப்பு மனிதர் தனக்குள் எத்தனை முறை,எப்படியெல்லாம் அழுதிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.பெரும் பாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல வகையான சோகங்கள் உண்டு.அதை அவர்கள் வெளியே சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் ஒவ்வொரு
வருடைய நிலைப்பாடு தான்.'மறதி'மட்டுமே மனிதர்களுக்கு இறைவன் ஏற்படுத்திக் கொடுத்த வசதி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.நல்ல செயல்களை நினைவில் வையுங்கள் அல்லனவற்றை நினைவில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
கிடைத்ததைக்
கொண்டு,தேடியது கிடைத்து விட்டது என்று எண்ணிக்கொள்ளுங் கள்.காலம் கடந்து கிடைத்தாலும்,
தேவையான நேரத்தில் கிடைத்தாலும் இரண்டையும் சமஅளவில் நேசிக்கக் கற்றுக்கொள்வோம்!

No comments:

Post a Comment