Friday, December 8, 2023

வாழ்க்கையில் எது மகிழ்ச்சி?-தினம் ஒரு சிந்தனை

வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைப்பது அனைத்தும் மகிழ்ச்சியைத் தரும். 

சிறு வயதில் நமக்கு கிடைக்கும் ஐம்பது பைசா மிட்டாய் கூட வாழ்க்கையில் மகிழ்ச்சியைத்தரும். 

படிக்கின்ற காலத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளியில் தேர்ச்சி அடைவது கூட மகிழ்ச்சி தானே! 

முதன் முதலாக வாங்கி ஓட்டும் இருசக்கர வாகனமும் மகிழ்ச்சியைத் தந்தது தானே! 

திருமணம் ஆகி, அதன் பின்  குழந்தைகள் பிறந்தால் பெற்றோர் என்ற நிலைக்கு உயர்ந்ததும் மகிழ்ச்சி தானே! 

இந்த மகிழ்ச்சியைப் பெற நாம் சில துன்பங்களை அனுபவித்து இருப்போம். அதன் பின் நாம் பெற்ற மகிழ்ச்சிக்கு, நாம் சந்தித்த துன்பமும் ஒரு அடிப்படையாகும். 

என் நண்பர் ஒருவர் தேநீர்க் கடைக்குச் சென்றால், தேநீர் மட்டும் அருந்துவதில் என்ன இன்பம்? என்று கேட்பார். 

தேநீர் அருந்துவதே இன்பம் தானே! என்று நான் சொல்வேன். அதற்கு அவர் சொல்வார் தேநீரோடு, சுடச்சுட ஒரு வடையும் சாப்பிடுவது தான் இன்பம் என்பார். 

*ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதோ ஒன்று மகிழ்ச்சியைத் தரும்.* 

உங்களுக்குப் பிடித்தது போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுங்கள்! 


அப்போது ஏற்படும் மகிழ்ச்சியை வாழ்வில் காணுங்கள். 

No comments:

Post a Comment