Sunday, December 10, 2023

முழுக்கவனம் செலுத்த முடியாமல் போவது ஏன்?

என்னால் ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது,அதில் முழுக்கவனம் செலுத்த முடியாமல் போகின்றது அது ஏன்?என்று கேட்டான் என் நண்பன்.

உனக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை இல்லை இது உலகில் வாழும்
நூற்றுக்கு 99 பேர்களுக்கும் உள்ள பிரச்சனை தான் இது.

மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.மனதை ஒருமுகப் படுத்துவது என்பது எளிதான செயல்இல்லை
யென்றாலும்,நீ முயற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்தி விட்டால் உன்னால் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இருக்க முடியாது! வள்ளலார் தெய்வமணி மாலையில் மனதின் தன்மையைப்பற்றி நமக்கு விளக்குகின்றார்:
“வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்? வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனது மனது
பேய்கொண்டு கள் உண்டு, கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ? பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ? பேதைவிளையாடு பந்தோ?
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ? பெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ? காலவடி வோ? இந்த்ர ஜாலவடிவோ? எனது கர்மவடிவோ? அறிகிலேன்!
தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.”
சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் மனம் கட்டுப்படும். மனத்தைக் கட்டுப் படுத்தினால் சுவாசம் கட்டுப்படும்.
இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தது! சுவாசம் நுண்ணியது. மனம் சுவாசத்தை விட நுண்ணியது.
சுவாசம் என்பது மூக்கு, நுரையீரல்களால் இயல்பாக செய்யக்கூடிய செயல். நாம் உயிர்த்திருக்க இன்றியமையாத செயல்.அதுவே மனத்தை வசப்படுத்தும் வழி! ஆகவே மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமத்தைக்கற்றுக்கொண்டுவிட்டால்,உன்னால் எதிலும் முழுக் கவனத்தோடு ஈடுபடமுடியும்.



No comments:

Post a Comment