Thursday, December 21, 2023

சிறந்த ஒரு சிந்தனை

பெரும்பாலான மனிதர்கள் தங்களின் பிறவியின் பயனை புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தானாக செயல்பட முடிவதில்லை. பெற்றோர்கள், சுற்றத்தினர் அவர்களை அலைக்கழிப்பதால், அவர்கள் வாழ்வில் ஒர்ப்பிடிப்பின்றி அடுத்தவர் போக்குக்கு செயல்பட பழகிவிடுகின்றனர்.


அதனால் இப்பிறவியில் அவர்கள் யாராக இருக்கின்றார்களோ அதில் அவர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றது. அப்பிறவி நினைத்தபடி வாழ விடாமல் இந்த சமூகம் சுற்று சூழலுக்கு அவரை மாற்றுவதால் அதற்கு சுயசந்தோஷம் இருப்பதில்லை.


 இந்த வெறுப்பு அவர்மீதும், சமூகத்தின்மீதும் விழுகின்றது. அதனால் அவர்கள் ஜடமாக உலவுகின்றனர். மனதில் எந்த அமைதியும் இல்லை. சந்தோஷமும் இல்லை. எனவே ஆன்மாக்களை சுயமாக செயல்பட அனுமதியுங்கள்.


அலைமோதும் கடலில் எப்படி அல்லி வளரமுடியாதோ, அதைப்போல அலைபாயும் மனதில் அமைதி நிலவாது. தீய, பிறருக்கு தீமை விளைவிக்கும் கொடிய எண்ணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தாது. 


அந்த எண்ணங்களின் கொந்தளிப்பில் நல்ல எண்ணங்கள் அமுங்கிவிடும். நம் மனதை சுத்தப் படுத்தி, தூய்மையாக வைத்திருங்கள். அங்கு நிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி வழிய மிகமிக அதிக வாய்ப்புண்டு. 


மனதில் தோன்றும் கவலைகளும் வருத்தங்களும் பறவைபோல நம் மனத்திலிருந்து பறந்துவிட வேண்டும். அவைகளை அங்கே தங்கவிட்டால் பறவைகள்போல கூடுகட்டி குஞ்சு பொறித்துவிடும்.


மனத்தில் தோன்றிய வேண்டாத எண்ணங்களை வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது. அதற்கு முயற்சி செய்தால் அந்த எண்ணங்களே அதிகமாகி அளவில் பெருக வாய்ப்புண்டு. அது வீண்முயற்சி. ஒன்றை நீக்கின் புதியதாய் ஒன்று சேரும். 


எனவே வேண்டாத எண்ணங்களை நீக்கவேண்டும் என்பதற்காக சிந்தித்து காலத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து, முற்றிலும் புதிய நல்லெண்ணங்களை, உயர்ந்த ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.

பழையது முற்றிலும் மறந்து காணாமல் போய்விடும். 


மனிதனின் இயல்பான மனநிலை இது. செயலில் முழுக்கவனம் இருந்தால் மற்றது மறக்கப்படும். உற்சாகமோ சலிப்போ எதுவாக இருந்த போதும் அது மனதின் பிரதிபலிப்பேயாகும்!


┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈ 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

No comments:

Post a Comment