Saturday, December 2, 2023

அருமையான ருசியில் தேங்காய்ப்பால் சாதம்

 இப்படி செய்து பாருங்க சாதம் பூ போல உதரி உதரியாக இருக்கும்!*


*எப்பொழுதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது கலவை சாதமாகத்தான் இருக்கும். தக்காளி சாதம், தயிர் சாதம், புதினா தக்காளி சாம்பார் சாதம் இப்படி பல வகையான சாதங்கள் இருக்கின்றன. எப்போதும் சாப்பிடும் குழம்பு சாதத்திற்கு பதிலாக இவ்வாறு சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். இவ்வாறு தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் இந்த உணவு காரம் குறைவாகவும், ருசியாகவும் இருக்கும்.*


*இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த பொருட்களை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது இந்த உடல் நோய் அபாயமின்றி நாம் ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும். அந்த வகையில் இயற்கையில் கிடைக்கும் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களில் ஒன்று தேங்காய். தேங்காய்ப் பாலை கொழுப்புச் சத்து மிகுந்த ஒரு வேண்டாத உணவுப் பொருளாக சிலர் நினைக்கிறார்கள். நிஜம், அப்படியல்ல வயிற்றுப் புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தணியவும் தேங்காய்ப் பால் அற்புதமான உணவுப் பொருள்.*


*தேங்காய் பால் தாய்பாலுக்கு இணையான சந்துக்கள் நிறைந்தாக கூறப்படுகிறது. தேங்காய் பாலை நாம் உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தேங்காய் பாலில் எதிர்ப்பு சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. தேங்காய்ப் பாலை பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்களை நாம் தயார் செய்ய முடியும். இவ்வாறு பல மருத்துவ குணங்கள் நிறைந்த தேங்காய் பாலில் சாதம் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சப்பு கொட்டி சாப்பிடுவார்கள். இதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது ஏதாவது கிரேவி போன்றவற்றை தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.*


*எப்பொழுதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது கலவை சாதமாகத்தான் இருக்கும். தக்காளி சாதம், தயிர் சாதம், புதினா தக்காளி சாம்பார் சாதம் இப்படி பல வகையான சாதங்கள் இருக்கின்றன. எப்போதும் சாப்பிடும் குழம்பு சாதத்திற்கு பதிலாக இவ்வாறு சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். இவ்வாறு தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் இந்த உணவு காரம் குறைவாகவும், ருசியாகவும் இருக்கும். இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த பொருட்களை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது நமது உடல் நோய் அபாயமின்றி நாம் ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும்.*


*தேவையான பொருட்கள்:


*1 1/2 கப் பாசுமதி அரிசி*


*3 கப் தேங்காய் பால்*


*1 பெரிய வெங்காயம்*


*4 பச்சை மிளகாய்*


*1/2 கப் பச்சை பட்டாணி*


*1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பச்சை கப் புதினா, கொத்தமல்லி*


*1 தக்காளி*


*உப்பு தேவையான அளவு*


*எண்ணெய் தேவையான அளவு*


*2 டீஸ்பூன் நெய்*


*1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்*


*செய்முறை:*


*முதலில் அரிசியை இரண்டு மூன்று முறை நன்கு அலசி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.*


*குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.*


*பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, பச்சை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்.*


*பிறகு நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.*


*அதன்பிறகு பச்சை பட்டாணி, தக்காளி சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.*


*பிறகு தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.*


*இவை நன்றாக கொதித்து வந்த பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி 3 விசில் வரை விடவும்.*


*பிறகு குக்கரை திறந்து கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.*


*அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயார்.*

No comments:

Post a Comment