Thursday, December 14, 2023

கல் பாசி-தினம் ஒரு மூலிகை

 


*கல் பாசி*  மலை பகுதிகளில் பாறைகளின் மேல் படர்ந்து வளரும் ஒருவகை பாசி இவை அசைவ உணவுகளில் மனம் ஊட்டியாக பயன்படுகிறது உலர்ந்த பாசி ஒருபுறம் பச்சையாகவும் மறுபுறம் வெள்ளையாகவும் காணப்படும் சிறுநீர் பெருகும் தன்மை உடையது சிறுநீர் தடைப்பட்டு அடிவயிறு வீங்கி வழித்தரும்போது அடிவயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபின் கல்பாசியை வேகவைத்து வயிற்றின் மேல் வைத்துக் கட்ட அரை மணி நேரத்தில் சிறுநீர் வெளியேறும் கல்பாசியுடன் கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி ஆகியவற்றை சம அளவாக அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும் கல்பாசி கஸ்தூரி மஞ்சள் கசகசா முத்தக்காசு கிச்சிலி கிழங்கு கார்போகரிசி சந்தனத்தூள் வெட்டிவேர் விலாசம் வேர் அகில் சாம்பிராணி வகைக்கு 50 கிராம் பொடித்து செம அழகு பச்சைப் பயறு மாவுடன் கலந்து வைத்துக் கொண்டு தேவையான அளவு பொடியை நீரில் குழைத்து உடம்பில் பூசி வைத்திருந்து குளித்து வர படை சொறி சிரங்கு தீரும் நன்றி.

No comments:

Post a Comment