Saturday, December 9, 2023

கர்க்கடசிங்கி-தினம் ஒரு மூலிகை



* கர்க்கடசிங்கி*  

ஒருவகை மரத்தின் இலைகளில் ஏற்படும் முடிச்சுகளாகவும் மரத்தில் வழியும் பிசினாலும் ஏற்படுவதாக கருதப்படுகிறது. மெல்லிய தோலுடைய உள்ளீடற்ற கூடுதலாக இருக்கும் செரிமானம் மிகுத்தல் சளி அகற்றுதல் வெப்பம் உண்டாகுதல் பித்த நீர் பெருக்குதல் துவர்ப்பியாக செயல்படுதல் ஆகிய மருத்துவ பண்புகளை உடையது இம்மூலிகையை வறுத்து தாய்ப்பால் விட்டு இழைத்து ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அறை குண்டுமணி அளவு கொடுக்க கழிச்சல் குருதி கழிச்சல் சீத கழிச்சல் மூலக்கடுப்பு ஆகியவை தீரும் வாயில் இட்டு சுவைத்து விழுங்க இருமல் தனியும் இதன் பொடியை அரை கிராம் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் பலம் மிகும் ஒரு கிராம் அளவாக இதன் பொடியை சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பாலறிந்து வர வெள்ளைப் போக்கு நிற்கும் இதன் பொடி திப்பிலி மருதம்பட்டை இவற்றை சம அளவு பொடித்து கலந்து ரெண்டில் இருந்து மூன்று கிராம் அளவாக கொடுக்க சளியினால் ஏற்படும் இருமல் தீரும் கர்க்கடசிங்கி சுக்கு திப்பிலி முருங்கை பிசின் கத்தூரி மஞ்சள் இவற்றை சம அளவு பொடித்து கலந்து அரை தேக்கரண்டி அளவாக தேனில் கலந்து கொடுக்க வறட்டு இருமல் தீரும் நன்றி.

No comments:

Post a Comment