Thursday, December 7, 2023

கருஞ்சீரகம்-தினம் ஒரு மூலிகை


விதைகளுக்காக பயிரிடப்படும் சிறு செடியினம் முக்கோண வடிவ கரிய சிறு விதைகளே மருத்துவ பயன் உடையவை வயிற்று வாயு அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் மாதவிடாய் உண்டாக்குதல் தாய்ப்பால் மிகுத்தல் முன்பு கொல்லுதல் வறட்சி அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது கருஞ்சீரகப் பொடி ஐந்து கிராம் காடியில் கலந்து கொடுக்க குடற்புழுக்கள் வெளியேறும் இதையே ஒரு கிழமை காலை மாலை கொடுத்து வர வெறிநாய்க்கடி நச்சு பூச்சிகளின் கடி ஆகியவற்றால் தோன்றும் தொல்லைகள் நீங்கும் 5 கிராம் சீரகத்தை நீரில் அரைத்து தேன் கலந்து கொடுக்க மார்படைப்பு பெருமூச்சு கல்லடைப்பு ஆகியவை தீரும் கருஞ்சீரகத்தை காடி அல்லது நல்லெண்ணையில் அரைத்து பற்று போட படைகள் தீரும் கருஞ்சீரகம் தேனில் அரைத்து அடிவயிற்றில் பற்று போட கர்ப்ப வழி நீங்கும் கருஞ்சீரகத்தை கோணையில் அரைத்து பற்று போட வீக்கம் கரையும் கருஞ்சீரகப் பொடியை மோரில் கலந்து கொடுத்தால் தொடர் விக்கல் குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment