Sunday, December 31, 2023

தினம் ஒரு மூலிகை-சிறு நாகப்பூ




*சிறு நாகப்பூ* மலைப்பகுதிகளில் வளரும் கடினமான மர வகை நீண்ட இலைகளையும் வெண்ணிற மலர்களையும் தளிர் செந்நிறமாக இருந்து வெளி பச்சை நிறமாக மாறும் இதன் இலை பூ விதை வேர் பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது உலர்ந்த பூக்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூ வயிற்று வாய்வு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுதல் பசி தூண்டுதல் குணமுடையது மலமிளக்கும் வேர் பட்டை வியர்வையை பெருக்கியாக செயல்படும் இலையை அரைத்து மேல் பூச்சாக தடவ தீப்புண் கொப்பளம் ஆகியவை தீரும் இலையை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி 50 மில்லி அளவாக குடித்து வர கால் பாதம் விரல் ஆகியவற்றில் தோன்றும் இசிவு போகும் உலர்ந்த பூவை பொடித்து அரை கிராம் அளவாக தேனில் காலை மாலை கொடுத்து வர வயிற்று வாயு நீரடைப்பு பெண்களுக்கான உதிரச் சிக்கல் ஆகியவை தீரும் இரண்டு கிராம் பூவை ஒன்று இரண்டாய் இடித்து 250 மில்லி நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டி கற்கண்டு கலந்து காலை மாலை கொடுத்து வர கை கால் பாதம் விரல் இவற்றில் தோன்றும் நரம்புசிவு தீரும் நன்றி.

No comments:

Post a Comment