Saturday, December 9, 2023

இறைவனிடம் எதைக் கேட்பது?



வைரவியாபாரி ஒருவன் தனது வைரங்கள் அனைத்தையும் விற்று, பணமாக்கி அதை ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பினான். வழியில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். அதிலோ வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊருக்குப் போய்ச்சேரவேண்டும் என்பதால் ஆற்றைக் கடக்க இறங்கினான் வைரவியாபாரி.


வெள்ளத்தால்நீரில் நிலை தடுமாறியதால் தனது பணமூட்டையை பறிகொடுத்தான்.


"ஐயோ என் பண மூட்டையை யாரவது எடுத்துக்கொடுங்கள்!" என்று கத்தினான்.அது ஒரு மீனவனின் காதில் விழுந்தது.உடனே அவன் நீரில் குதித்து பணமூட்டையை எடுத்துக்கொண்டு கரைக்குவந்தான்.பணமூட்டையை எடுத்துக் கொடுங்கள் எனக் கேட்டவர் இங்குவந்து எடுத்துப்போகவும் என்று கத்தினான். வெகுநேரம் காத்திருந்தான்,யாரும் அதைப்பெற வரவில்லை .


அவனுக்கு நன்குபுரிந்தது, அந்த பண மூட்டைக்குச் சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்குப்பதிலாக தன்னை காப்பாற்றும் படி குரல் கொடுத்திருந் தால் அவரைக் காப்பாற்றிஇருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.


இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இறைவனிடத்தில்
பல செல்வங்களையும் வசதியினையும் கேட்பதை விட நிம்மதியான வாழ்வினை கேட்பதே நிலையான மகிழ்ச்சியைத்தரும் என்று நம்புங்கள்!நாளை மீண்டும் சந்திப்போமா!

No comments:

Post a Comment