Monday, December 25, 2023

பென்சில் கள்ளி-தினம் ஒரு மூலிகை

 


கொடி அல்லது பென்சில் கள்ளி என்று அழைப்பார்கள் இது ஒரு கள்ளி இனத்தைச் சார்ந்த மர சிறு மர வகையாகும் தமிழகமெங்கும் காணப்படும் இலை அற்ற உருண்டை தண்டுகளால் ஆனவை வறட்சியான இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது இதன் பால் தண்டு ஆகியவை மருத்துவ குணம் உடையவை உள்ளழலாற்றுதல் சிறுநீர் பெருக்குதல் குளிர்ச்சி உண்டாக்குதல் நீர் மலம் போக்குதல் ஆகிய குணம் உடையது தனலில் வாட்டி பிழிந்த வடிகட்டிய சாற்றை குழந்தைகள் வயதுக்கு ஏற்ப கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு கொடுக்க கரப்பான் தொண்டைக்கட்டு சொறி சிரங்கு ஆகிய பிணிகள் அகலும் கொடி கள்ளிச்சாறு 200 மில்லி வேர் உலர்ந்தது கொடிவேலி வேர்ப்பட்டை எருக்கம் வேர்ப்பட்டை அமுக்கிரான் கிழங்கு வகைக்கு 40 கிராம் பொடித்து வைத்துக் கொண்டு இரசம் கந்தகம் செந்தூரம் வகைக்கு 5 கிராம் ஒன்றன் பின் ஒன்றாக அரைத்து சேர்த்து அரைத்து குடிக்கள்ளி சாறு விட்டு கலந்து 1500மி.லி சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து பதமுற காய்ச்சி வைத்துக்கொண்டு கொடிக்கள்ளி தைலம் 15 மில்லி முதல் 20 மில்லி அளவாக காலையில் மட்டும் கொடுக்க பேதியாகும் இதனால் மேக ரணங்கள் பிடிப்பு சூலை அரையாப்பு குறுக்கு காண்டமாலை பவித்திரம் தீரும்

No comments:

Post a Comment