Wednesday, December 20, 2023

குங்குமப்பூ-தினம் ஒரு மூலிகை

 


* *குங்குமப்பூ*.  இது ஒரு சிறு செடியினம் இதன் பூவில் உள்ள மகரந்த தாள்களே குங்குமப்பூ எனப்படும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பசி தூண்டுதல் வெப்பம் உண்டாகுதல் துயர் அடக்கல் இசிவு அகற்றுதல் மாதவிடாய் தூண்டுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது ஒரு குண்டுமணி அளவு குங்குமப்பூவை பாலில் இரவு தோறும் கருவுற்ற தாய்க்கு கொடுத்து வர சளி தொடர்பான பிணிகள் அணுகாது பிறக்கும் குழந்தை நலத்துடனும் திடமானதாகவும் அமையும் 3 கிராம் குங்கும பூவை சோம்பு குடிநீரில் கரைத்து கொடுக்க மகப்பேறு எளிதாகும் 5 கிராம் குங்கும பூவை நேரில் அரைத்து கொடுக்க வயிற்றில் இறந்த குழந்தை வெளியாகும் ஒரு குண்டுமணி அளவு குங்கும பூவை நாள்தோறும் மூன்று வேளை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன மகப்பேற்றின் போது ஏற்படும் உதிரச் சிக்கலை வெளிப்படுத்தும் குங்குமப் பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

குங்குமப்பூ சர்க்கரை வகைக்கு 3 கிராம் பாலில் அரைத்து 250 மில்லி பால் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் நன்கு கலந்து பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு காலை மாலை 5 துளிகள் நாசியில் விட்டு வர அனைத்து பினிஷமும் தீரும் *குங்குமப்பூ*நன்மைகள் 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த கூடியது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் கரோட்டின் அதிக நன்மைகளை தரக்கூடியது இதில் வைட்டமின் ஏ சி மற்றும் மேனேஜ் எலும்புகளை பலப்படுத்தவும் திசுக்களை சரி செய்யவும்  ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது *தீமைகள்*கண்டிப்பாக அதிக அளவு உட்கொண்டால் நிறைய தீமைகள் உடலில் விளையும் முக்கியமாக வாந்தி மயக்கம் ஏற்படலாம் வாய்ப்பு உள்ளது கர்ப்பமாக இருப்பவர்கள் அதிகமாக உட்கொண்டால் 5 மாதத்திற்கு மேலும் வாந்தி மயக்கம் வயிற்றுப் பிரட்டல் ஏற்படலாம் வாய்ப்பு உள்ளது ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் அளவுக்குத்தான் குங்குமப்பூ உட்கொள்ள வேண்டும் அதனை காய்ச்சிய பாலில் போட்டு அருந்த வேண்டும் அதற்கு மேல் சாப்பிட மருத்துவரின் அறிவுரையின்படி சாப்பிடலாம் நன்றி.

No comments:

Post a Comment