Monday, December 11, 2023

தினம் ஒரு மூலிகை-கள்ளி முளையான்

 


கள்ளி முளையான் பசி உணர்வை குறைக்கும் உடல் பருமன் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இதற்கு காரணம் உணவு தொடர்பானவை அதீத பசி உணர்வும் ஒரு காரணம் தேவையற்ற பசி உணர்வை கட்டுப்படுத்த உதவி செய்கிறது கள்ளிமுளையான் என்ற தாவரம் தமிழக காடுகளில் தானே வளரும் சிறு செடியினம் வீடுகளில் தொட்டிகளிலும் வளர்க்கப்படுகிறது மலை காடுகளில் தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டை சாப்பிடுவார்கள் கைப்பூ காற்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும் உமிழ் நீரை பெருக்கும் பசியை தூண்டும் குளிர்ச்சி உண்டாக்கும் செரிமான பிரச்சனையை விரைவுப்படுத்தும் உடலை உரம் பெற வைக்கும் குமட்டல் வாந்தியை நிறுத்தி நாவின் சுவை உணர்வை ஒழுங்குப்படுத்தும் தண்ணீர் தாக்கத்தை அடக்கும் இளம் கொழுந்து தண்டுகளை பறித்து மென்று தின்ன புளிப்பு சுவையுடன் இருக்கும் வெறும் வயிற்றில் தின்று வர பசியின்மை தீரும் பித்தம் தனியும் வாதம் தீரும் கள்ளி மூளையான் இளம் கொழுந்துகளை துவையலாக பாகப்படுத்தி உணவுடன் சாப்பிட்டு வர பசியின்மை மிகு பித்தம் வாதம் தீரும் நன்றி.

No comments:

Post a Comment