Saturday, December 9, 2023

மனிதனுக்கு காதினால் என்ன பயன்?


மனிதனுக்கு காதினால் என்ன பயன்? என்று யாரையாவது கேட்டால்,உடனே பதில் வரும், மனிதனுக்கு காது இருப்பது 'கேட்பதற்கு' என்பார்கள். ஆனால் காது இன்னொரு வேலையும் செய்கிறது. அதுதான் மிக மிக முக்கியமானது என்பதை எத்தனைபேர் அறிவார்கள்? தெரியாது.


உங்களின் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த காது மிக அவசியமாகிறது.
ஒரு இருசக்கர வாகனத்தால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?


இரு
சக்கரவாகனம் நிற்பதற்கு
கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது.
காரணம் அதனால் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.


ஆனால் மனிதனால் அது முடியும், அவனது வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையில் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால்தான்.
இறந்தவரை நிற்கவைக்க
முடியுமா? முடியாது ஏன்எனில் அவர் சமநிலை தவறிவிட்டார்.
ஆனால் உயிருடன் இருப்பவரால் நிற்க முடியும்.


காது கேட்பதற்கும் 'காக்லியா' திரவம் உதவுகிறது, காதின் மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் அமைந்துள்ளது.அந்த காதுமடல்கள் மனிதனுக்கு இல்லா விட்டால்,சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி அதுவே மனிதனைக்கொன்று விடும்.ஒலிதனை ஃபில்டர் செய்வது காது மடல்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமே! நாளை மீண்டும் சந்திப்போமா!

No comments:

Post a Comment