Sunday, December 10, 2023

'படித்த முட்டாள்' என்பது சரிதானே!

கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி மனிதர் களுக்குள் சண்டை ஏற்பட்டு, சத்தம் அதிகமாகும் பொழுது கேட்கின்ற ஒரு வார்த்தை,
"போடா படிச்ச முட்டாள்!" என்பது தான். பதிலுக்கு ஒரு வார்த்தை திரும்ப கேட்கும், "ஆமாடா நான் படிச்ச முட்டாள்!நீயோ படிக்காத முட்டாள்!" என்பது தான்.இதனை என் நண்பனிடம் சொன்ன பொழுது அவன் சொன்னான்,படிக்காத வனை முட்டாள் என்று திட்டினால் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்.
படித்தவனை,படித்த முட்டாள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.மாறாக கோபப்படுவார்கள்.
ஆனால் நான் ஒரு "படித்த முட்டாள்" என்பதை என் வாழ்வில் உணர்ந்து கொண்டேன்.அதை உனக்குச்சொல்கிறேன் கேள் என்றான். எனது வாழ்க்கையை நானே சிதைத்துக் கொண்டேன்.
எனது கண் முன்னே எனது இலட்சியங்கள் நாசமாய் போனதை கண்ட நான் ஒரு படித்தமுட்டாள் தானே? என்றான். கல்லூரியில் படிக்கும்பொழுது, நண்பன் ஒருவன் வா நீயும் நானும் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒன்று படிக்கலாம் என்று என்னை அழைத்தான். நான் மறுத்தேன். காரணம் அதற்கு பணம் கட்ட வேண்டும்.என் தந்தையால் அது முடியாது. எனவே எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்.கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த காரணத்தால் இன்றோ அவன் குவைத்தில் வேலை பார்க்கிறான்.
அவனது சம்பளம் மாதம் ரூபாய் மூன்று லட்சம். அந்தப்பயிற்சியை தவிர்த்த நான் இன்று சென்னையில் வேலை பார்க்கிறேன்.
சம்பளம் ரூபாய் முப்பது ஆயிரம் வாங்குகிறேன்.
பத்து வருடங்களாக ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறேன். என்னோடு வேலையில் இருந்த பலபேர் வெளி நாட்டிற்கு வேலைக்குப் போய்விட்டனர்.நான் மட்டுமே ஒரே இடத்தில் முன்னேற்றமே இன்றி வாழ்கிறேன்.இப்பொழுது சொல் நான் ஒரு
"படித்த முட்டாள் தானே" என்றான். எதைச்சொல்லி அவனை அமைதிப்
படுத்துவது என்று எனக்குப்புரியவில்லை.
அமைதி காத்தேன்.


No comments:

Post a Comment