





பாலம் கல்யாணசுந்தரம்.
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச்செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாக தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக்கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
உலகில் எந்த நாட்டைச்சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்து கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிவிட்டு திரும்பினார்.
ஐயா அவர்கள் தன் பேருக்குப்பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்கு சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.
ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக்கல்லுரிகளுக்கு தானமாக எழுதி வைத்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக்காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப்பெற தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப்பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.
பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்த இவர் ஏழைகளுக்குக்கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாக கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.
1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத்திகழ்கிறது.
Only service mind has a beautiful Heart's.
படித்ததில் பிடித்தது.
ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தாள் ஒரு இளம்பெண், அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல்,
“கொ… கொஞ்…கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும் பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள்.உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும் போது, அதற்குப் பதிலாக,
எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்க” என்றாள் கனிவுடன்.
பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான். அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் பசியால் வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக
அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.
அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர் அன்றில் இருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார்.
பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.
அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்தாள். மிகப் பெரிய தொகை குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள்..
கட்டணத் தொகைக்குக் கீழே, மருத்துவர் எழுதி இருந்தார்.
“ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி..
*ஆம்.,தோழர்களே..,*
*நிபந்தனையற்ற அன்பு என்ற நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நாமும் நன்றாக இருக்கலாம்; மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்*.
*எதிர்ப்பார்ப்பு இல்லாமல்* *எல்லோரிடமும்* *அன்பாக இருந்தால்,*
*ஏற்புத்தன்மை* *மற்றும்* *தெளிவாக சிந்திக்கும்* *மனப்பான்மையையும் மேம்படுத்த*
*உதவுகின்றது.*
*ஆம்., நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வோம்...✍🏼🌹*
சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் இன்று நம் சித்தர்களின் குரல். வாயிலாக.....
இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று சித்தர்கள் கூறினார்கள்.
அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக் கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள்.
ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது.
பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதைகள் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். (படம் பார்க்கவும்... புரியும்)
மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.
ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) l, இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. (படம் பார்க்கவும் )
மாசி மாதம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மை கொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தி இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.
அதேசமயம் 180 கோண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும். ஆனால், அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு. மேலும், பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின் தொடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.
மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆசிய நாடுகளில்
நடு இரவு 12:15 AM முதல்
12: 45 AM வரை
உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.
இந்த "லூமினிபெரஸ் ஈத்தர்" (Luminiferous Eather) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன், கடவுள், பிரமாண்டம், இறைத் துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
இதற்கு ஆதாரமாக கி.மு.நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17ம் நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு.
ஈத்தர் சக்தி உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் (Self Blessing)செய்து கொள்ளும் பொழுது இது நமது டி.என்.ஏ (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமை உள்ளது.
மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?
பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் (Melatonin) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள். அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். (Circadian Rhythm)
மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்ற நாடுகளில் இல்லை?
நமது நாட்டில் மட்டும்தான் சித்தர்கள் ரிஷிகள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை குருமார்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள்.
மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை.
இந்த ஈத்தரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈத்தர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து ஜாதி மத மக்களுக்கும் நல்லது.
சிவராத்திரி முட்டாள்தனம் என்று சொல்லும் சிலருக்கு எனது கேள்வி உங்களுக்கு பெயரில் பிரச்சனையா? அறிவில் பிரச்சனையா? அறிவியலில் பிரச்சனையா? உங்களுக்கு பெயர் பிரச்சனை என்றால், உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அறிவையும் அறிவியலை மாற்ற முடியாது.
இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக, ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் விழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.
நினைத்தது நடக்க
6 எளிய வழிபாடுகள்!
*2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.*
விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன.
மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,
சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக் கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன.
அப்போது சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். கூடவே ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது 300 ஆண்டு களுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.
*இந்த மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவ தியானம் செய்திட எல்லா காரியங் களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.*
மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.
சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங் களையும் நிறை வேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும்.
*சிவ யோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.*
*2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது.*
*ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது.*
*இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.*
*ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி* நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள்.
சிவ யோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும். உங்கள் வீட்டை பாது காப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள்.
சித்த யோகம் கூடி வருவதால் விநாயகப் பெருமானையும் இந்நாளில் வணங்கிட வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
இந்த மகா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.
மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம்.
இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
வீட்டில் மகா சிவராத்திரி எப்படி வழிபட வேண்டும்?
மகா சிவராத்திரி யன்று அதி காலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவ பூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, வைக்க வேண்டும்.
மாலை நேர வழிபாட்டை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும்.
அன்று இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்ய முடியா விட்டாலும், ‘ *லிங்கோற்பவ* ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
இது தவிர இந்த ஆண்டு விசேஷ ஐந்து யோகம் கூடும் நாள் என்பதால் முக்கியமாக இந்த 6 எளிய வழி பாட்டையும் செய்ய வேண்டும்.
(01) விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அவரை முதலில் வணங்கினால் சித்த யோகம் உங்களை சிறப்பாக்கும்.
(02) சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி இந்நாளில் வணங்க ஷிரவண நட்சத்திர வேளை உங்களுக்கு சுபயோகத்தைக் கொண்டு வரும்.
(03) சுக்கிர பிரதோஷம் மகா சிவராத்திரி நாளில் வருவதால் நந்தியெம்பெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும்.
(04) சர்வார்த்தி ஸித்தி யோக நாள் என்பதால் இந்நாளில் குலதெய்வ வழிபாடும் செய்து பித்ருக்களின் ஆசியால் வெற்றி பெறலாம்.
(05) மகா சிவராத்திரி நாளில் இடர் களையும் பதிகங்கள் பாடி ஈசனைத் தொழ வந்த தீ வினைகள் நீங்கும். வர விருப்பவை நலமாக அமையும்.
(06) சர்வ யோகங்களையும் அருளும் இந்நாளில் 4 கால பூஜை களையும் கண்டு தரிசித்தால் இக, பர இன்பங்கள் யாவும் சேரும்.
உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக சிறப்புடன் அமையும்.
🍁 சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி அகில உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் அந்த தினம் விடுமுறையாகும். அமெரிக்கா சோசலிஸ்ட் கட்சி 1909ஆம் ஆண்டு பெண்களுக்கு நாட்டில் அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 28ஆம் தேதியை பெண்கள் தினமாக அறிவித்தது. 1910ஆம் ஆண்டு கோபன் கோஹன் நகரில் நடந்த அகில உலக மகளிர் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட முடிவின் படி 1911 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் கொண்டாட முடிவு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.*
*🎻 எந்த ஒரு வெற்றிக்கும் கொண்டாட்டத்துக்கும் பின்னால் யாரோ ஒருவரின் வலியும், வேதனையும், போராட்டமும் நிச்சயம் இருக்கும் சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் எட்டாம் தேதி பின்னணியில் இவையெல்லாம் அடங்கியுள்ளது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமைகளும், பாரபட்ச அணுகுமுறையும் பாலியல் தொந்தரவுகளும் சென்ற நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. 12 மணி நேர வேலை செய்கிற ஆணை விடக் குறைந்த கூலி பாலியல் தொல்லை போன்ற அநீதிகளை எதிர்த்து 1857 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். துணி ஆலைகளில் வேலை பார்த்தப் பெண்கள் முதலாளித்துவ ஆணாதிக்க கரங்களால் இந்தப் போராட்டம் அப்படியே அமுக்கப்பட்டாலும், 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிளர்ந்து எழுந்தது. பெண்களுக்கான வாக்குரிமை, குழந்தை தொழிலாளர் மீட்பு எனக் கூடுதல் கோரிக்கைகளுடன் 1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன் கோஹன் நகரில் நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான சோசியலிசப் பெண்கள் கலந்து கொண்டார்கள். ஜெர்மனியின் பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிளாரா செட் கின் எட்டாம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பினார். இதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது . அதே மாதம் 25ஆம் தேதி நியூயார்க்கின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண்கள் கருகி உயிரிழக்க காரணம் பணியிடத்து பாதுகாப்பின்மை எனத் தெரியவந்தது மீண்டும் போராட்டம் பெண்கள் நலன் குறித்து கூக்குரல்கள் எழுந்தன.*
*🎻1917 ஆம் ஆண்டு இரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் மற்றும் ஒரு போராட்டம் நடந்தது .அதில் அலெக்ஸாண்ட்ரா கொல்லோண்டாய் என்றப் பெண்ணில்வாதி கலந்துகொண்டு மார்ச்8 பெண்கள் தினமாக அறிவித்து அன்றைய தினம் விடுமுறையும் அளிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பினார். தொடர்ந்து நீண்ட நெடிய போராட்டங்களின் இறுதியில் 1975 ஆம் ஆண்டு ஐநா சபை மார்ச் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது. அது இன்று வரை தொடர்கிறது.*
🎈🎈🎈🎈🎈🎈
பகலில் வணங்கினால்- விருப்பங்கள் நிறைவேறும்
இரவில் வணங்கினால்
- மோட்சம் கிட்டும்
மேலும் சிவராத்திரி பற்றிய தகவல்கள
*சி*வனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன.
சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும்.
நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.
சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.
மாத சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் :
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும்.
லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.
நைவேத்தியம் கொடுத்தல் நீண்ட ஆயுளையும்
மேஷம் - வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.*
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.*
*மிதுனம் - சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.*
*கடகம் - சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.*
*சிம்மம் - பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.*
*கன்னி - இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.*
*துலாம் - பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.*
*விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.*
*தனுசு - இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.*
*மகரம் - இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்.*
ஒருவரின் நல்ல செயல்களுக்காக உண்மையாக பாராட்டி புகழும் போது, அவர் மனதில் நீங்கள் நீங்க இடம் பிடிக்கிறீர்கள்...
அழகு, அன்பு, படிப்பு, பதவி, திறமை இப்படி ஒருவரிடம் இருக்கலாம். அவைகளை அறிந்து உண்மையாக புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் புகழப்பட்டவரால் மனதில் நினைத்தை சாதித்துக் கொள்கிறீர்கள்...
குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக் கண்டு அவர்களை பாராட்டிப் பாருங்கள். அவர்கள் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்...
எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை...
நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் நம் வீடு தேடி வந்து அதிகாலையில் நாளிதழ் போடுபவர்களுக்கும், துப்புறவு பணியாளர்களுக்கும், பால்காரர்களுக்கும் நன்றி கூறுகிறோம்...?
அவ்வாறு அவர்களுக்கு நன்றி கூறி அவர்ககளைப் பாராட்டும்போது, அவர்கள் எப்போதும் உங்கள் அன்புக்கு அடிமையாகிறார்கள். அதனால் இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்வார்கள்...
‘நிறந்த நேசத்தையும், பாசத்தையும் வைத்துக் கொண்டு, வெளித் தோற்றத்திலே எரிந்து விழுந்து, அவபெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்...?
நமக்கு ஏனோ பிறரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை. இந்த உலகில் எல்லோருமே பாராட்டுதலை எதிர்ப்பார்க்கின்றனர். அப்படி தங்களுக்கு பாராட்டுகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இது உங்களுக்கும், எனக்கும், ஏன் எல்லோருக்குமே பொருந்தும்...
நாம் ஒருவரை ஒரு நற்செயலுக்காக பாராட்டுவது என்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும்...
அது மட்டுமல்லாமல் அவரது அந்த நற்குணம் மேலும் செம்மையடைய உதவும். மேலும் உங்களுக்குள் இருக்கும் நட்பும், உறவும் மேலும் வலுப்பெறும். உங்களின் மீதான பிறரது மதிப்பும் மரியாதையும் உயரும்...
ஆம் நண்பர்களே...!*
பாராட்டுங்கள் - உங்களுக்கு பாராட்ட தோன்றினால்!, உடனே பாராட்டி விடுங்கள். மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாரட்டு என்ற ஊக்கியை பயன்படுத்தி வெளிக் கொணருங்கள்...!*
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல்தான். ஆனால்!, அது தரும் பலனோ அளவில்லாதது...!*
பாராட்டு விழுபவனை எழவைக்கும். ஆம்!, பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக்கான படிக்கட்டு. பாராட்டு என்பது புகழக்கூடிய வார்த்தைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை...!!*
ஒரு சிறிய புன்னகையும்கூட பிறரின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும். ஒருவரை நீங்கள் பாராட்டுவதை மற்றவர்கள் பார்க்கும்போது, உங்களிடம் இருந்து இந்த நல்ல பண்பைக் கற்றுக்கொள்வர். உங்கள் மீதும் நல்ல மதிப்பு வரும். பாராட்டு என்பது இதயங்களை வெல்லும் திறன்...!!*
பிறரை பாராட்டும்போது, அதை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மேலும் கடுமையாக உழைப்பர். நேர்மையாகச் செயல்படுவர். பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்...!!!*
பூனைய வச்சு ஒருவன் ஊர் ஊராக வித்தை காட்டி என் பூனை நான் சொல்வதையெல்லாம் கேட்கும் என்று கூறினானாம்.
அங்குள்ள ஒரு பெரியவர் உன் பூனை நான் சொல்வதையும் கேட்கும் என்றார் .
வித்தைக்காட்டுபவனுக்கு கோபம் அது எப்படி உன் பேச்சை கேட்கும் நான் பல வருடமாக பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன் என் பேச்சை மட்டுமே கேட்கும் என்றான் .
அந்த பெரியவர் இல்லை என் பேச்சையும் கேட்கும் என்று மீண்டும் கூறினார் .
என் பூனை என் பேச்சை கேட்கிறதா ? உன் பேச்சை கேட்கிறதா ?? பந்தயம் வைப்போமா என்றான் .
பெரியவர் உன் பூனை என் பேச்சை கேட்டுவிட்டால் இனி நீ வித்தை காட்டும் தொழிலையே விட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் .
போட்டி ஆரம்பமானது வித்தைகாரன் சொல்வதையெல்லாம் கேட்டது பெரியவர் அமைதியாக வேடிக்கை பார்த்தார் .
கூட்டம் ஆரவாரம் செய்தது .
வித்தைக்காரன் ஒரு வளையத்தை வைத்து அதற்குள் புகுந்து வெளியே வா என்றான் .
அந்த நேரத்தில் பெரியவர் தன் பையில் வைத்திருந்த எலியை மைதானத்தில் விட்டு பூனையே அதை பிடி என்றார் .
எலியை கண்ட பூனை எலியை விரட்ட வித்தைக்காரன் முழித்தான்.
பெரியவர் கூறினார் பார்த்தாயா உன் பூனை நான் சொல்வதையும் கேட்கும் என்றார் .
மனிதனின் மனமும் அப்படிதான் சில நல்ல விஷயங்களை கேட்டு படித்து மனதை மாற்றி வித்தைக்காரனை போல பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமே தவிர நமது மனதின் உண்மையான குணம் மாறாமல்தான் இருக்கிறது .
அதைத்தான் நபியவர்களும் கூறினார்கள் ஒரு மலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது என்று யாராவது கூறினால் நம்புங்கள் ஒரு மனிதனின் இயற்கையான குணம் மாறி விட்டது என்று கூறினால் நம்பாதீர்கள் என்றார்கள் .
குணத்தை சில பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தலாமே தவிர முழுமையாக மாற்ற முடியாது .
ஒரு மகானிடம் ஒரு மனிதன் நான் நீங்கள் கூறிய நல்லதையும் செய்கிறேன் என் பழக்க வழக்கத்தில் இருக்கும் தீமைகளையும் செய்கிறேன் நிறுத்த முடியவில்லை என்ன செய்வது என்று கேட்டார்.
அந்த ஞானி கூறினார் நீ நல்லதும் செய் தீயதும் செய் என்றாவது ஒருநாள் ஒரு விஷயம் நின்று விடும் என்றார் .
அந்த மனிதர் திகைத்து தீயவை நிற்பதற்கு பதிலாக நல்லவை நின்று விட்டால் என்ன செய்வது என்றார்
அந்த ஞானி அதுவும் நல்லதுதான்.
உன் இயற்கையான குணம் என்னவென்று உனக்கு தெரிந்து விடும் என்றார் .
நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம்.
நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது.உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்.நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்து விட வேண்டும்.
நன்றி, பாராட்டு உரியவருக்குக் கொடுக்கும் போது தான் அவர்கள் மீண்டும் அதைக் கூடுதல் மதிப்புடன் நமக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்.
நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.
உங்களது நன்றியைத் தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.
அது அவரைக் கொட்டி விட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார்.
மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்:
கடைசி வரை அது தன் சுபாவத்தை விடவில்லை'. அது போல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்..
ஆம்..தோழர்களே..,
நன்றி சொல்லும் போது அதை உண்மையாகச் சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.*
நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள்.முணு முணுக்காதீர்கள்.*
மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின்! சொல்லில் வெளிப்பட வேண்டும்.
நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.
சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்..🌹*
நாமக்கல் ராசிபுரம் பகுதியில் உள்ள வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை
👉புதிதாக இணைந்த மாணவர்களை வீட்டில் இருந்தே மாலை அணிவித்து, இசை வாத்தியங்களுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் தலைமையிலான ஆசிரியர்கள்
👉அரசுப்பள்ளியில் இணையும் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் 14 திட்டங்களின் கீழ் பயன்பெற முடியும் எனவும் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
🌈🌈நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - Director Proceedings வெளியீடு.
🌈🌈உயர் தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது
🌈🌈தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை
🌈🌈இணை இயக்குநர் பணியிடங்கள் மாறுதல் செய்து ஆணை வெளியீடு. அரசாணை:185 நாள்: 04.03.2024
🌈🌈வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு தகுதி பட்டியல்: மார்ச் 15-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு.
🌈🌈இனி அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் தானாகவே சம்பளத்தில் இருந்து வருமானவரி கழிக்கப்படும்.
🌈🌈பிளஸ் 1 தமிழ் தேர்வு சற்று கடினம்; சென்டம் கஷ்டம் - மாணவர்கள் கருத்து
🌈🌈பொறியாளர், சுகாதார ஆய்வாளர் பணிகள் உள்பட 2,455 இடங்களுக்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு
🌈🌈கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு NEET பயிற்சி.
🌈🌈நேற்று நடைபெற்ற "12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 12,696 மாணவர்கள் பங்கேற்கவில்லை - பள்ளி கல்வித்துறை தகவல்.
🌈🌈உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்குதல்- SCERT இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈பணி ஓய்வு பெற உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் கருத்துரு அனுப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈31 முதுகலை (தமிழ்) ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 4 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.
🌈🌈இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🌈🌈TNSED செயலியில் மாணவர் வருகையில் சில சிறிய கோளாறு உள்ளது - விரைவில் சரிசெய்யப்படும் - State EMIS
🌈🌈புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி மார்ச் 11 விடுமுறை
🌈🌈கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு
🌈🌈மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது.
👉பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் விரைவில் சரி செய்யப்படும் - மார்க் ஜுக்கர்பெர்க்
👉மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக், இன்ஸ்டா! தளம்
🌈🌈2015-ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
👉சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)
👉சிறந்த நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)
👉சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - கவுதம் கார்த்திக் (வை ராஜா வை)
👉சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
👉சிறந்த வில்லன் - அரவிந்த் சுவாமி(தனி ஒருவன்)
🌈🌈அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியது SBI வங்கி!
மார்ச் 6ம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இந்த ஆவணங்களை சமர்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என SBI வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
🌈🌈டெல்லியில் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு
🌈🌈கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌈🌈கலைஞர் நினைவிட அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் பார்வையிட அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
🌈🌈போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகள் கைது - காவல்துறை அறிவிப்பு
🌈🌈இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம்: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
🌈🌈மார்ச் 8-ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்- குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு
🌈🌈ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
🌈🌈ஹிமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ. 1, 500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
🌈🌈மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மார்ச் 7ம் தேதி காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூடுகிறது.
🌈🌈சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்.
🌈🌈பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழையால் கடந்த 48 மணிநேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
🌈🌈இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
🌈🌈உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது.
🌈🌈ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
🌈🌈ஆட்டோ தொழிற்சங்கம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னை, கிண்டியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளோடு போக்குவரத்து துறை ஆணையர் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் இயங்கும் ஆட்டோகளுக்கு அரசே செயலியை உருவாக்கி கட்டண விவரத்தை வெளியிட வேண்டும் - ஆட்டோ சங்கங்கள் கோரிக்கை
🌈🌈2024 ஐசிசி டி-20 உலக கோப்பை
போட்டிகளை டிஸ்னி பிளஸ் Hotstar மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிப்பு
🌈🌈திமுக கூட்டணி நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
போட்டியிடும் தொகுதி எண்ணிக்கைகளை விடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவாதே நாங்கள் மேலானதாக கருதுகிறோம்
பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களின் முதன்மையான நோக்கம்
-விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
🌈🌈டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
🌈🌈மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு ஒளிந்துகொள்ளக்கூடாது
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
🌈🌈நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல்
மத்திய அரசு தகவல்
🌈🌈“தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்!”
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
🌈🌈பேரிடர் காலத்தில் வராமல் பிரசாரத்திற்கு மட்டுமே வரும் தலைவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்”
ஆர்.பி.உதயகுமார் முன்னாள் அமைச்சர்
🌈🌈வரும் 14 அல்லது 15-ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறக்கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு செய்கிறது.
🌈🌈அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா இன்று தொடக்கம் :
அமைச்சர் சேகர்பாபு
🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு
தங்கம் ஒரு கிராம் ரூ.6,015க்கும், ஒரு சவரன் ரூ.48,120க்கும் விற்பனை.
🌈🌈நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
( *தமிழ்நாட்டு அரசியலுக்கு ஏற்ற கதை*)
எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்*.
நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: *சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன*.
கழுதையும் சென்றது.
கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.
கழுதை நரியிடம் சொன்னது: *நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.*
அதற்கு நரி சொன்னது: *சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.*
கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.
மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது!
கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: *நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.*
நரி சொன்னது: *நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.*
நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது.
இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.
சிங்கம் நரியிடம் சொன்னது: *பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.*
நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.
சிங்கம் கோபமடைந்து கேட்டது: *மூளை எங்கே?*
நரி பதிலளித்தது: *அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?*
( *50 வருடங்களாக ஏமாறும் கழுதைகளாக தமிழ்நாட்டு மக்கள் இருக்கவேண்டாம்* என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது)
*தமிழ்நாட்டு அரசியல்*
நாளும் ஒரு சிந்தனை*
தேளின் குணம் கொட்டத்தான் செய்யும். சந்தனம் மணக்கத் தான் செய்யும். தேள் போன்றவரிடமும் சந்தனமாய் இருங்கள். சந்தன வாசம் நாளடைவில் அவர்கள் மீதும் வீசக்கூடும்!!
நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதை வெந்நீரில் கலந்து அடிக்கடி பருகினால் வாயுத் தொல்லை விரைவில் தீரும்.
நாளும் ஒரு செய்தி*
சுத்த தங்கத்தை நம் கைகளாலேயே பிசையலாம்.
நாளும் ஒரு சமையல் குறிப்பு*
உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிதளவு சோம்பை தூளாக்கி தூவினால் மணம் கமகமவென இருக்கும்.
நாளும் ஒரு பொன்மொழி*
புகழ்ச்சியால் மகிழ வேண்டாம்...
நிந்தனையால் வருத்தமுறவும் வேண்டாம்.
நேரத்திற்கு தகுந்தாற்போல் வேஷத்தை மாற்றவும்
ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தைக் காட்டவும் தெரிந்தவர்களே மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!
உண்மையான அன்புக்கு போலி உறவும்,
போலியான அன்பிற்கு உண்மையான உறவும் கிடைப்பதால் தான்...
அன்பு இன்றும் யாரோ ஒருவரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது.!!
ஒருவர் நம்மை நோகடிப்பதற்காக மட்டம் தட்டிப் பேசும் போது அவர்களை திருப்பி நாமும் மட்டம் தட்டி பேச வெகு நேரம் ஆகாது...
அவ்வாறு செய்யாமல்
இருப்பதற்கான காரணம் நாமும் அவர்களைப் போல சாக்கடை மனம் படைத்தவர் அல்ல என்பதை காட்டத் தான்.!!!
துக்கம், கவலை, பயம், கோபம், திகில்... இதெல்லாம்?
சரி, துக்கம் வரும்போது நெஞ்சை அடைப்பது ஏன்
ஆனால், கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்
சுத்தமாகப் பசி இல்லாமல் போய்விடுகிறதே... அது எப்படி?
பயத்தில்
சிறுநீர் வருகிறதே... அது எவ்வாறு?
கோபம் வரும்போது உடல்
பலவீனமாக இருப்பவன்கூட அசுர பலத்துடன் ஒரு பாறாங்கல்லைத்
தூக்கிவிடுகிறானே... அது எப்படிச் சாத்தியம்?
திகில் ஏற்படும்போது
ஒரு கணம் மூச்சு நின்றுவிடுகிறதே... அதற்கென்ன காரணம்?
ஒரே
மனதில் இருந்து வருவதாக நீங்கள் சொல்கிற மற்ற உணர்ச்சிகள்,
வேறுவேறு உறுப்புகளைப் பாதிக்கின்றனவே..
இதற்கான விளக்கம்?"
ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு
உறுப்பிலிருந்து வருகிறது.
1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்
2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை.
3. நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.
4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.
5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.
அதன்படி துக்கம்
நுரையீரலிலிருந்து வருகிறது.
அதனால்தான் துக்கப்படும்போது
சுவாசம் தேங்கி
நெஞ்சை
அடைக்கிறது!
கவலை, மண்ணீரலிலிருந்து
வருகிறது! பசிக்கும் ஜீரணத்துக்கும்
பொறுப்பாக இருக்கும் மண்ணீரலில் கவலை மையம்
கொள்வதால்தான், அதன் சக்தி முழுவதும் அதற்கே செலவாகி,
ஜீரணம் நின்று போய், பசியும் எடுப்பதில்லை.
பயம், சிறுநீரகத்தில் பிறக்கிறது.
பயப்படும்போது சிறுநீரகங்கள் தன்
கட்டுப்பாட்டை
இழப்பதால்தான்,
சிறுநீர் தானே வெளியேறுகிறது!
கோபம், கல்லீரல் சம்பந்தப்பட்டது!
உடல் உழைப்பின்போது
எந்தப் பகுதிக்கு அதிக இயக்கம் தேவையோ, அந்தப் பகுதிக்கு சக்தி
அளிப்பது கல்லீரலே! ஆகவேதான், கோபவெறியில் எதையாவது
தூக்கி அடிக்கவேண்டும் என்று நினைத்த உடனே கைகளுக்கு
அசாத்திய பலம் பிறந்து, பெரிய பாறையையும் தூக்கிவிட
முடிகிறது.
*டிங்…. டிங்…ன்னு ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் , நிக்கல் , குரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய இந்த 7 உலோகங்களின் கலவையே இந்த மணி.*_
_மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும். ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்துவகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது._
_*மனித மூளையானது வலது , இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டாம். அப்படி செயல்படும் விதத்தில்தான் கோவில் மணி தயாரிக்கப்படுகிறது.*_
_கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும் .*_
_ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது._
_*மணியிலிருந்து எழும் ஓசையில் நாம் “ஓம்” என்ற மந்திரத்தை உணர முடியும். கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு படைக்கும் போதும் அடிப்பதுண்டு . அதில்லாமல் கோவிலுக்கு போவோர் தங்கள் பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும் கோவில்மணியை ஒலிக்கவிடுவதுண்டு. ஒவ்வொரு கோயிலிலும் கர்ப்பகிரகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது.*_
_பொதுவாக கோயில் வாசலில் கட்டியிருக்கும் மணியை கோயிலுக்குள் நுழையும்போது ஒலிக்கவிடுவதன் காரணம், நமது ஆழ்மனதை விழிக்க செய்வதற்காகவே செய்யப்படுகிறது. உடலால் தூங்குபவர்களை ஓசையின்மூலம் எழுப்புவதுபோல், மனதையும் எழுப்பவே இந்த முறையை பின்பற்றுகிறோம். இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம் கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளியும் நம்மை மேலும் ஊக்குவிக்கின்றன._
_*கோவில் மணியின் ஒலியை கூர்ந்து கேட்பது ஒரு வகையில் தியானம் செய்வதற்கு ஈடாகும். கோவில் மணியிலிருந்து ஒலி எழும்பும் நேரம் நம் மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகள் அழிக்கப் படுகின்றன.*_
_நாம் தன்னிலை இழந்த நிலைக்கு செல்ல தயாராகிறோம். மனம் விழிப்புணர்ச்சி அடைகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டுவர உங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும்._
_*கோயில் மணிகளை அதன் தண்டை இழுத்து அடிப்பதால், அதன் ஒலி பல அலைவரிசைகளை வெளியேற்றுகிறது. இது வளிமண்டலத்தில் பரவுகிறது. ஒலிகள் வெளிப்படும்போது அதனுடன் சேர்த்து புனிதமான கதிர்களும் வெளி வருகின்றன . இவை வளிமண்டலத்தில் உள்ள தீய ஆற்றல்களை அழிக்கின்றன.*_
_பொதுவாக இந்துக்களின் வீடுகளில் பூஜையின்போது மணியோசை எழுப்பி இறைவனை வணங்குவது வழக்கம். மணியோசையால் இறைவனை அழைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. மணியோசையின் ரீங்காரத்தால் தீய சக்திகள் வீட்டிலிருந்து நீங்கிவிடும் என்பதும் ஒரு எண்ணமாகும். இறைவனை வணங்கும்போது எந்த கெட்ட வார்த்தைகளும், கேட்டக்கூடாத ஓசைகளும் செவிகளில் விழக்கூடாது என்பதற்காகவும் இந்த ஒலியை எழுப்பி இறைவனை வணங்குவர்._
_*முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடனும் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே செய்தனர் என்பது இன்று அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்ற முயற்சிப்போம். நிச்சயம் அது நமக்கு நன்மையையே தரும்.*_


பத்திக்கும், மதிப்பிற்கும் உரிய இடம் கோவில் மட்டுமல்ல...
நாம் பணிபுரியும் இடமும் தான். ஊழல் செய்து அதன் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.
📰 *நாளும் ஒரு செய்தி*
மழைத்துளியில் *'உயிர்ச்சத்து B12'* நிறைந்துள்ளது.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
சாம்பார் செய்யும்போது காய்கறிகள் நன்றாக வெந்த பிறகே புளித் தண்ணீரை சேர்க்க வேண்டும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
தோல்வியிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி!