Tuesday, March 5, 2024

உலகிலேயே மிகவும் விலைமதிப்புமிக்க கார்

உலகிலேயே மிகவும் விலைமதிப்பான காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆர்கேடியா ட்ராப்டெய்ல் என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் மொத்த மதிப்பு 31 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 257 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கார்களிலேயே இதுதான் அதிக விலை கொண்ட கார் என கூறப்படுகின்றது.

விலைமதிப்பு மிக்க கார்

கடந்த ஆண்டுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அமேதிஸ்ட் மற்றும் லா ரோஸ் நோயர் என 2 விலை உயர்ந்த கார்களை அறிமுகம் செய்திருந்தது.


இந்நிலையில் அந்த 2 கார்களின் விலையை பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது ஆர்கேடியா ட்ராப்டெய்ல் கார் உள்ளது. ஆர்கேடியா என்பதற்கு பூமியின் சொர்க்கம் என்ற பொருள் உண்டு.

இந்த காரின் அறிமுக விழா சிங்கப்பூரில் மிக பிரமாண்டமாக நடந்தது. உலகின் மிகச்சிறந்த மர துண்டுகள் இந்த காரின் பாகங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
அதிக விலைக்கான காரணம்

இந்த ஆர்கேடியா ட்ராப்டெய்ல் காரின் இன்டீரியரை மட்டும் உருவாக்குவதற்கு 8 ஆயிரம் மணி நேரம் ஆனதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரில் மொத்தமே 2 இருக்கைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.



ஆர்கேடியா ட்ராப்டெய்லின் காரின் நிறமானது வெளிப்புறமாக பார்க்கும்போது இந்த கார் வெள்ளை நிறத்தில் இருப்பதாக காட்சியளிக்கும். ஆனால் இந்த வண்ணங்களில் பல அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளை வண்ணத்துடன் அலுமினியம் மற்றும் உயர்தர கண்ணாடிகள் சேர்க்கப்பட்டு இந்த காரின் மேற்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை உயர்ந்த 233 மரத் துண்டுகளால் இந்த காரில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளதால் தான் காரின் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment