Wednesday, March 6, 2024

நாளும் ஒரு குறிப்பு

நாளும் ஒரு சிந்தனை*

தேளின் குணம் கொட்டத்தான் செய்யும். சந்தனம் மணக்கத் தான் செய்யும். தேள் போன்றவரிடமும் சந்தனமாய் இருங்கள்.  சந்தன வாசம் நாளடைவில் அவர்கள் மீதும் வீசக்கூடும்!!

நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதை வெந்நீரில் கலந்து அடிக்கடி பருகினால் வாயுத் தொல்லை விரைவில் தீரும்.

நாளும் ஒரு செய்தி*

சுத்த தங்கத்தை நம் கைகளாலேயே பிசையலாம்.

நாளும் ஒரு சமையல் குறிப்பு*

உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிதளவு சோம்பை தூளாக்கி தூவினால் மணம் கமகமவென இருக்கும்.

நாளும் ஒரு பொன்மொழி*

புகழ்ச்சியால் மகிழ வேண்டாம்...

நிந்தனையால் வருத்தமுறவும் வேண்டாம்.

                        

No comments:

Post a Comment