Friday, March 8, 2024

நிபந்தனையற்ற அன்பு - இன்றைய சிந்தனை.


ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தாள் ஒரு இளம்பெண், அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், 

“கொ… கொஞ்…கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும் பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள்.உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.

“நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும் போது, அதற்குப் பதிலாக,

எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்து இருக்காங்க” என்றாள் கனிவுடன்.

பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான். அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் பசியால் வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக 

அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.

அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர் அன்றில் இருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார். 

பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்தாள். மிகப் பெரிய தொகை குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டாள்..

கட்டணத் தொகைக்குக் கீழே, மருத்துவர் எழுதி இருந்தார்.

“ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி..


*ஆம்.,தோழர்களே..,*


*நிபந்தனையற்ற அன்பு என்ற நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நாமும் நன்றாக இருக்கலாம்; மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்*. 


*எதிர்ப்பார்ப்பு இல்லாமல்* *எல்லோரிடமும்* *அன்பாக இருந்தால்,*

*ஏற்புத்தன்மை* *மற்றும்* *தெளிவாக சிந்திக்கும்* *மனப்பான்மையையும் மேம்படுத்த* 

*உதவுகின்றது.*


*ஆம்., நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வோம்...✍🏼🌹*

No comments:

Post a Comment