Monday, November 13, 2023

ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான்.

 எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.


அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.

தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான்.

அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை.

படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான்.

எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்

No comments:

Post a Comment