Friday, May 31, 2024

தமிழ் SMS and Status - மேற்கோள்கள்

👇👇👇👇👇👇👇
எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லை
நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்

சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடை

தமிழ் லைப் மேற்கோள்கள்


பல காயங்களுக்கு 
கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு 
பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி...

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மன

எங்க போறீங்க இதோ உங்களுக்காக - Tamil Motivational Quotes

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 மு

Motivational Quotes in Tamil and English

Motivational Quotes in Tamil and English – Part 1

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்

Bigger successes are comprised of little changes. 

நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

Hope comes with success. But success will come only to those with hope.

மனம் உங்களைக் கட்டுப்ப

Thursday, May 30, 2024

நம்மை உறுதியாக்கி வலுவாக்கும் நெருக்கடிகள்!

 **

🌹🌹🌹

நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கைதான் நல்லது, வசதியானது என்ற மனப்போக்கு நம்மில் பல பேருக்கு உள்ளதைப் பார்க்கின்றோம்.


ஆனால் ஒருவருக்கு நெருக்கடி வருவது நல்லதுதான். கசப்பான மருந்து இல்லாமல் நோய் குணமாகாது, ஜப்பானியர்களுக்கு உயிர் உள்ள மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில் மீன்கள் அவ்வளவா

கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா?

 ****

**சத்தியத்திலும் சத்தியம். உண்மையிலும் உண்மை. உங்களுக்கு கிட்னி  பழுதா? சிறுநீரக கோளாறா? குணமடைய வேண்டி சென்று தரிசிக்க  வேண்டிய கோயில்.**


**பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்தூர்.**


திருச்சி To  பெரம்பலூர் சாலையில்  பாடாலூர் என்ற ஊரிலிருந்து  வலதுபுறமாக திரும்பி 6 கி.மீ சென்றால் ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் பஞ்ச நந்தன நடராஜரை தரிசிக்கலாம்.

சிந்தனைத் துளிகள் - 30052024

உலகத்தில் மிகப் பெரிய சொத்து எதுவென்றால் 

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் கவலைப் படாதே 

எல்லாம் சரியாகிவிடும் என்று கூறும் 

ஒரு உறவு நம்முடன் இருந்தால் போதும்.!


தள்ளாடும் வயது வரும்முன் 

தனக்கென சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் ஒருவேளை தனித்து விட்டாலும் 

தளராமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழலாம்.!! 


மரணத்தை கண்டு 

ஆண்கள் எப்போழுதும் பயப்படுவதில்லை.

ஆண்களின் பயம் எல்லாம் 

தன் மரணத்திற்கு பிறகு 

தன் குடும்பத்தின் நிலையை பற்றி தான்.!!!


செய்தித்துளிகள் - 30.05.2024 (வியாழக்கிழமை)

பொறியியல் கலந்தாய்வுக்கு நேற்று மாலை 6 மணி வரை 2,22,802 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு

செய்துள்ளனர்.

⛑️⛑️11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

⛑️⛑️அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️TRB Exam - பட்டதாரி ஆசிரியர்‌ தேர்வு - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை

⛑️⛑️ஆக.3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு - கல்வித்துறை அறிவிப்பு

⛑️⛑️நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி (NSNOP) இணையதளம் வழியாக பெறுதல் - Director Proceedings வெளியீடு.

⛑️⛑️பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

⛑️⛑️கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஜூன் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு.

⛑️⛑️மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு.

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

⛑️⛑️மருத்துவமனையில் நான் நன்றாக இருக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து முழுமையாக மீண்டு விரைவில் வீடு திரும்புவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியீடு.

⛑️⛑️நெல்லை-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.30க்கு எழும்பூர் வந்தடையும் என தகவல்.

⛑️⛑️தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

⛑️⛑️டெல்லியில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு உத்தரவு.

கார்களைக் கழுவ குழாய் நீரைப் பயன்படுத்துதல், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிதல், கட்டுமானம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக தண்ணீரைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவைக்கும் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

வீண் தண்ணீர் செலவை தடுக்கும் வகையில் டெல்லி நகரம் முழுவதும்  200  குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்துமாறு டெல்லி ஜல் போர்டு தலைமை அதிகாரிக்கு அமைச்சர் அதிஷி உத்தரவு.

⛑️⛑️டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக 126°F (52.3°C) வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி!

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஊள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⛑️⛑️"18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து"

வாகனத்தின் ஆர்.சி-யை ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமல்

பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.

⛑️⛑️கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்                                                    ⛑️⛑️வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு

⛑️⛑️கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்.

⛑️⛑️முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது: தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு

⛑️⛑️பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று ரத்து

⛑️⛑️ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை

⛑️⛑️மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை

⛑️⛑️முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக திகழ்கிறது.! அரசு பெருமிதம்

⛑️⛑️பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக இன்று கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

⛑️⛑️ மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல்

⛑️⛑️கலைஞரின் கனவு இல்லம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது:-

👉கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

👉வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.

👉300 சதுர அடி RCC கூரையுடன், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும்.

👉வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும்.

👉ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

👉கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

👉குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் என்ற அளவில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டமே, கலைஞரின் கனவு இல்லம் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

👉கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கமே, குடிசைகளில் வசித்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக சிமெண்ட் கூரை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படுவதாகும். குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவா்களே, இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியானவா்கள். சொந்தமான நிலம், பட்டா உள்ளவா்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் அதே இடத்தில் வீடு கட்டத் தகுதி படைத்தவா்கள்.

👉புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்குப் பதிலாக இந்தத் திட்டத்தில் வீடு கட்ட இயலாது. அதேசமயம், புறம்போக்கு இடம் ஆட்சேபனை அற்றது என்று வருவாய்த் துறையால் முறைப்படுத்தப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.

👉யாரெல்லாம் தகுதியற்றவா்கள்? வாடகை குடிசை வீட்டில் குடியிருப்பவா்கள், கலைஞா் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட இயலாது. வணிக நோக்கத்துக்காக, விலங்குகளுக்காக பயன்படுத்தப்படும் குடிசைகளும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதி இல்லாதவை. குடிசையில் ஒருபகுதி ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட், உலோகத் தகடால் ஆனதாக இருந்தால் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்ட நிதி தரப்படாது. சொந்தமாக வீடு உள்ளவா்கள், அரசுப் பணியாளா்கள் ஆகியோரும் திட்டத்தின் கீழ் தகுதி இல்லாதவா்கள். பயனாளிகள் தோ்வு செய்யப்படும் முறை, குடிசைகள் விவரம்  ஆகியவற்றை இணையதளங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

👉தகுதியான நபா்களை உறுதி செய்வதற்கென தனிக் குழுவை ஆட்சியா்கள் அமைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா், உதவிப் பொறியாளா் அல்லது ஒன்றியப் பொறியாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றிய மேற்பாா்வையாளா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் குழுவில் இடம்பெற்றிருப்பா். குடிசை வீடுகளின் பட்டியல் அந்தந்த ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

👉வீடுகள் அனைத்தும் குறைந்தது 360 சதுர அடியுடன் இருக்க வேண்டும். அதில், 300 சதுர அடி ஆா்சிசி கூரையும், 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டப்பட வேண்டும். கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🙏🙏🙏🙏

💚 பழஞ்சோறு...!

ஆற்று நீர் வாதம் போக்கும்! 

அருவி நீர் பித்தம் போக்கும்!! 

சோத்து நீர் இரண்டையும் போக்கும்!!! 

-தேரையர்

எம் முன்னோர்களும், தற்பொழுது கிராமங்களில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும்

உப்பு

அட  இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா...


*கல் உப்பை வறுப்பதா...?*

*ஏன்...?*


*அவசியம் படி

Wednesday, May 29, 2024

வாயுகோளாறு நீங்க:

தே.பொருட்கள்..

பெருங்காயம் – 50 கிராம்

வெள்ளைப்பூண்டு – 50 கிராம்

கடுகு – 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

ஓமம் - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

அதிமதுரம் - 50 கிராம்

கோஷ்டம் - 50 கிராம்

நெய் – 200 கிராம்


     பெருங்காயத்தை எடுத்துக்கொண்டு ஒரு துணியில் முடிந்து இதனை ஒரு பானையில் போட்டு நான்கு லிட்டர் த

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி!!!

தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை 

*இந்து சமயம் உருவான இடம்* :*

*தமிழ்நாடு*

*இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்*:


1.*சைவம்*


2.*சாக்தம்*


3.*வைஷ்ணவம்*


4.*கணாபத்யம்*


5.*கெளமாரம்*


6.*செ

செய்தித் துளிகள் - 29/05/2024 (புதன் கிழமை)

பழைய பஸ் பாஸ் காண்பித்து பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்.

RTE கட்டாய கல்விக்கு அதிகமானோர் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு.

📕📘உயர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.

📕📘பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்புக்கான செயல்திட்டம்: தமிழக அரசுக்கு கல்வி அமைப்பு வேண்டுகோள்

📕📘புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமல்: சீருடையில் மாற்றமில்லை.

📕📘துணை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

📕📘பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் நகலை நேற்று

சிறு நெருஞ்சில்- தினம் ஒரு மூலிகை



 தரையோடு படர்ந்த சிறு கொடி மஞ்சள் நிற மலர்களை உடையது மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மை உடையது காய்களை உடையது சாலையோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடிய தாவரம் செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் தாது பலம் காமம் ஆகியவற்றை பெருக்கவும் தாது அழுகல் குருதி கசிவு ஆகியவற்றை நிறுத்தவும் மருந்தாக பயன்படுகிறது சிறு நெருஞ்சில் செடி ஒன்று அருகு ஒரு கைப்பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக காலை மதியம் மாலை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொடுக்க கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் நீர் சுருக்கு நீங்கும் 30 மில்லி சமூகச் சாற்றை மோர் அல்லது பாலுடன் உட்கொள்ள சிறுநீருடன் ரத்தம் போதல் குணமாகும் சமூகத்துடன் கீழாநெல்லி சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து பயிற்சி கையளவு எருமை தயிரில் கலந்து காலை மாலை ஒரு வாரம் கொடுக்க நீர் தாரை எரிச்சல் வெள்ளை நீரடைப்பு மேக கிராந்தி ஊழல் தீரும் நெருஞ்சில் விதையை பாலில் அவிழ்த்து உலர்த்தி பொடி செய்து காலை மாலை கொடுத்து வர தாது கட்டும் இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர் கட்டு சதை அடைப்பு கல்லடைப்பு ஆகியவை தீரும்.

நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...


கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..


. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்

இன்றைய நாளில் பிறந்தவர். (29-மே)

ஜான் எஃப் கென்னடி


🌟 உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜான் எஃப் கென்னடி (John F Kennedy) 1917ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.


🌟 இரண்டாம் உலகப் போரின் போது இவர் அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். அப்போது ஒரு வீரரைக் காப்

Tuesday, May 28, 2024

செய்தித் துளிகள் - 28.05.2024 (செவ்வாய்க்கிழமை)

🎁🎁பட்டதாரி, வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு TRB தகவல்.

🎁🎁OTP Verify செய்யாமல் TC வழங்கப்பட்டு Common Pool அனுப்பப்பட்ட மாணவர்களுக்கு OTP Verify செய்ய வழிமுறைகள் வெளியீடு.

🎁🎁குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு.

🎁🎁பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில் காலக்கெடு முடிந்த கோப்புகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்: இயக்குநர்கள் அறிவுறுத்தல்

🎁🎁பள்ளி கல்வி திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய நார்வே நாட்டு கல்வி அதிகாரிகளுக்கு அழைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

🎁🎁அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

🎁🎁குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

👉தமிழ்நாட்டில் ஜூன் 9ம் தேதி நடைபெறும் குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

👉தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு                                                               🎁🎁தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்

அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை

சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு

தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவு.

🎁🎁கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு நியமன அலுவலரே (Appointing Authority) பணிவரன்முறை செய்து ஆணை வழங்கலாம் - DSE செயல்முறைகள் வெளியீடு.

🎁🎁வாழ்வுச் சான்று சமா்ப்பிப்பு நடைமுறை: மீண்டும் பழைய முறைக்கு மாற்ற ஓய்வூதியா்கள் வேண்டுகோள்

🎁🎁அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

🎁🎁முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவ மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்க உத்தரவு.

🎁🎁புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம்.. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்.

🎁🎁தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்.

🎁🎁தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை.

🎁🎁New Western Norway பல்கலைக்கழகத்தில் பசுமை ஆற்றல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் தமிழ் மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

இம்மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர் தயாளனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, "இயற்கையின் மீது அன்பு கொண்டு தாங்கள் மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சி பற்றி தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துரைப்போம்" என தெரிவித்து, மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

🎁🎁+2 மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல் பெறலாம்.

👉+2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

👉இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

👉மறுகூட்டலுக்கு இதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறும், விண்ணப்ப படிவத்தை வரும் மே 29 முதல் ஜூன் 1 வரை நேரில் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🎁🎁இன்று முதல் கலந்தாய்வு.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

🎁🎁வாடகை வீட்டில் உள்ளோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.

🎁🎁வெளிநாட்டில் வேலை என மோசடி; எச்சரிக்கையாக இருக்க அயலக தமிழர் நலத்துறை வேண்டுக்கோள்.

🎁🎁இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.

🎁🎁மே மாதத்தில் மட்டும் ரூ. 22, 000 கோடிக்கு அந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

🎁🎁நடப்பாண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு, 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

👉இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ₹12.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

🎁🎁இளைஞர்களை டார்கெட் செய்யும் கோ-ஆப்டெக்ஸ்

இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில், தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு

இளைஞர்கள் அதிகளவில் விரும்பும் Printed Shirts-ஐ வரும் டிசம்பருக்குள் அறிமுகம் செய்கிறது கோ-ஆப்டெக்ஸ்

🎁🎁இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூன் 1 வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறி நீட்டிப்பு கோரியுள்ளார்.

🎁🎁தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 234 அறைகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் 

-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ

🎁🎁அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது, சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார்.

🎁🎁ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது முதல் 180KW DC ஃபாஸ்ட் பொது EV சார்ஜிங் நிலையத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.

🎁🎁தமிழகத்தில் சென்னையில் மட்டும் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு நேற்று வெப்பநிலை இருந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 40.6 டிகிரியும், வேலூரில் 39.9 டிகிரி அளவுக்கு நேற்று வெப்பநிலை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டுள்ளதாக ஐநா அதிர்ச்சித் தகவல்

3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பேரழிவுகரமான நிலச்சரிவில் 30 அடி ஆழத்துக்கு இடிபாடுகள் குவிந்து கிடப்பதால், மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

🎁🎁புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை இன்றி “சிறுநீரக கற்களை அகற்றும் கருவி”நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.4000/- (நான்காயிரம் ரூபாய்) செலுத்தி இச்சலுகையை  பெற்றுக் கொள்ளலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது...

JIPMER Hospital Puducherry 

For Appointment Contact  : 

 0413 2296562 

 0413 2296000

 0413 2272380

 0413 2298200

 0413 2272385

 0413 2272389

 0413 2272381

 0413 2272382

 0413 2272383

 0413 2272384

 0413 2272385 

 0413 2272386

 0413 2272387

 0413 2272388

தேவைப்படுவோரை பயன்பெற செய்யுங்கள்.

🎁🎁இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை: தேர்தல் வெற்றிக்குப் பிறகான செயல்திட்டங்களை விவாதிக்க திட்டம்.!                                                     🎁🎁ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு அரசு உத்தரவு                     👉இந்திய எண்களுடன் வரும் மோசடி வெளிநாட்டு அழைப்புகளை முடக்கும்படி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து மேற்கொள்வது போல வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகள், போலி அழைப்புகள் மூலம், சைபர் கிரைம், நிதிமோசடியில் ஈடுபடுவதாகவும், அத்தகைய அழைப்புகளை அடையாளம் கண்டு முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

🎁🎁திருடர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சோகம்..

ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) பலி

General Hospital என்ற தொலைக்காட்சி தொடர், USS Indianapolis: Men of Courage, Siberia உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

🎁🎁குறைந்த வயதில் எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

குறைந்த வயதில் (16) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் மும்பையை சேர்ந்த காம்யா கார்த்திகேயன்.

சிவனார் வேம்பு - தினம் ஒரு மூலிகை

 **

மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிற பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி  சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாயஞ் சிவனார் வேம்பு இது பாடல் வரி தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையை கக்கும் மூலிகை அன்றேறித்தான் பூண்டு என்றும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது எரிச்சல் தணித்தல் வீக்கம் கட்டிகளை கரைத்தல் நஞ்சு முறித்தல் ஆகிய குணம் உடையது செடியை வேருடன் உலர்த்தி பொடித்து சமன் கற்கண்டு

மருந்து குழம்பு பொடி செய்வது எப்படி?

மாதம் ஒருமுறை சாப்பிட உடல் நோய்கள் பறந்ததோடும்!*

மாதம் ஒருமுறை சாப்பிட உடலில் நோய்கள் அனைத்தும் காணாமல் போகும். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மருந்து குழம்பை மாதம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் கை-கால் வலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தும் காணாமல் போகும்.


*மருந்து குழம்பு பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:*


சீரகம் – ஒரு ஸ்பூன்


சதகுப்பை – சிறிதளவு


ஓமம் – ஒரு ஸ்பூன்


கண்டந்திப்பிலி – சிறிதளவு


வால் மிளகு – சிறிதளவு


அரிசி திப்பிலி – சிறிதளவு


சித்தரத்தை – சிறிதளவு


சுக்கு – ஒரு இன்ச்


மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்


இந்துப்பு – தேவையான அளவு


*செய்முறை:*


சீரகம், சதகுப்பை, ஓமம், கண்டந்திப்பிலி, வால் மிளகு, அரிசி திப்பிலி, சித்தரத்தை, சுக்கு என அனைத்து பொருட்களையும் ஒரு இரும்பு கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.


இதில் சுக்கு போன்றவற்றை உரலில் சேர்த்து உடைத்துக்கொண்டு, பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது மஞ்சள் பொடி மற்றும் உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துவைத்துக்கொண்டு 6 மாதம் வரை சேமிக்கலாம். வெளியிலே வைத்தாலும் கெடாது.


மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த மருந்து குழம்பை செய்து சாப்பிடவேண்டும்.


அப்போது உங்கள் உடலில் வலி, கை-கால் வலி, மூட்டு வலி, வயிற்றில் உள்ள பிரச்னைகள் என அனைத்தையும் போக்கும்.


*இந்தப்பொடியை பயன்படுத்தி மருந்து குழம்பு செய்வது எப்படி?*


இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. அதனால்தான் இது மருந்து குழம்பு பொடி என்று அழைக்கப்படுகிறது. 


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடியவைதான்.


ஆர்கானிக் ஷாப்களிலும் கிடைக்கும். பொருட்களை வாங்கி சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காய வைத்து பின்னர் பயன்படுத்தவேண்டும். 


ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மருத்துவகுணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய்க்ளு குணமளிக்கக் கூடியது.


*தேவையான பொருட்கள்:*


சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு


தக்காளி – 1


கத்தரிக்காய் – 2


பூண்டு – 12 பல்


கருவாடு – கைப்பிடியளவு


உப்பு – தேவையான அளவு


மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்


மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்


மருந்து பொடி – ஒரு ஸ்பூன்


புளிக்கரைசல் – ஒரு கப்


*தாளிக்க தேவையான பொருட்கள்:


நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்


வெந்தயம் – கால் ஸ்பூன்


கடுகு – கால் ஸ்பூன்


கறிவேப்பிலை – ஒரு கொத்து


*செய்முறை*


ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


அடுத்து வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக குழைய வேகவிடவேண்டும்.


பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மருந்து பொடி என அனைத்தும் சேர்த்து வதக்கவேண்டும்.


பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, கருவாட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.


எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கினால், சுவையான மருந்து குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.


இதை அசைவப்பிரியர் அல்லது கருவாட்டுக்குழம்பு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இதில் கருவாடு சேர்க்காமல் செய்து சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.


*வாழ்க வளமுடன்*

சிறு குறிஞ்சான் - தினம் ஒரு மூலிகை

 *


எதிரடுக்கில் அமைந்த இலைகளையும் விலை கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்று கொடி முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்க கூடிய விதைகளை உடையது இலை வே ர் மருத்துவ பயன் உடையது இலை பித்தம் பெருக்கும் தும்மல் உண்டாக்கும் வாந்தி உண்டாகும் நஞ்சு முறிக்கும் வேர் காய்ச்சல் போக்கும் நஞ்சு முறிக்கும் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் இலை அதனுடன் சம அளவு நாவர்கோட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி இடித்து சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு துளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும் தொடர்ந்து 40 நாட்கள் காலை மாலை சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படுத்தும் ஆஸ்துமா வீசிங் போன்ற சுவாச நோய்கள் நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர் தூள் ஒரு சிட்டிகை மற்றும் மிளகு திப்பிலி கலந்து தயாரித்த தூள் ஒரு சிட்டிகை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வர வேண்டும் இவ்வாறு தொடர்ந்து காலை மாலை ஏழு நாட்கள் உட்கொள்ள குணமடையும் நன்றி

கசகசா மருத்துவ குணம்

*"*

நம் நாட்டில் கசகசாவைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும் இது எப்படிக் கிடைக்கிறது? இதன் வளர்ச்சி எப்படி என்பது அநேகருக்குத் தெரியாது. உலகிலேயே மிகவும் போதை தரும் மூலிகை இனங்களில் ஒன்று இந்த கசகசா செடியாகும்.


கசகசா என்பது சிறுமணல் போன்ற விதைகள். இந்த சிறு விதைகளைக் கொண்ட ஒரு காய் உண்டு . இதற்குத்தான் போஸ்தக்காய் என்று பெயர் சிறிய எலுமிச்சங்காய் அளவு காய்க்கும். இந்தக் குத்துச்செடிக்கு போஸ்தக்காய்ச் செடி என்பது பெயராகும்.


போஸ்தக்காய் முற்றியபின் உடைத்தால் கசகசா வெள்ளை நிறமாக, மணல் போல் கிடைக்கும். இந்த கசகசா நம் உணவுப் பொருள்களில் சேர்க்கும் பொருளாதலால் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.


கசகசாவிற்கு உடலுரமாக்கும் சக்தியும், துவர்ப்பிச் செய்கையும், உடல் அழற்சியை எல்லாம் போக்கி, குளிர்ச்சி தந்து சுக்கிலத்தைப் பெருக்கும் குணமிருப்பதால் கசகசாவையும், தேங்காய்ப்பாலையும் சேர்த்து பலகார, காய்கறிகளில் கலந்து உணவாகக் கொள்வது நமது நாட்டின் வழக்கம்,


கசகசாவை 50 கிராம் புது மண்சட்டியில் தண்ணீருடன் ஊற வைத்து தண்ணீரை இறுத்து விட்டு கசகசாவை மட்டும் அம்மியில் வைத்து நன்கு அரைத்து காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து குடித்து வர இரத்தபேதி, சீதபேதி, கழிச்சல், சலதோடம், தூக்கமின்மை ஆகியன நீங்குவதுடன், மலக்கிருமி, தினவு நீங்கும். உடல் அழகு, தேக வலிமை பெற்று, தாது பலமுண்டாகும்.


உடலுறவில் தளர்ந்து உணர்ச்சி குன்றியவர்கள் கசகசாவை யும், 4 பாதாம் பருப்பையும் ஊறவைத்த பின்னர் மேல்படி பருப்பை தோல் நீக்கி, கசகசாவும் சேர்த்து மை போல் நன்கு அரைத்து ஆழாக்கு காய்ச்சிய பசும்பாலும், கற்கண்டும் சேர்த்து யாவும் ஒன்றாகக் கலந்து காலையில் மட்டும் 20 நாள் முதல் 40 நாள் குடித்து வர, உடலுறவில் நல்ல நிறைவும் உணர்ச்சியும் உண்டாவதுடன், நன்மக்கட்பேறும் உண்டாகும் 


கசகசாவை வேண்டிய அளவு எடுத்து பால் விட்டரைத்து பிழிந்து பனங்கற்கண்டு சமபாகம் சேர்த்து லேகியம் போல கிளறி சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர உடல் வன்மையும், சுக்கில விருத்தியும் உண்டாகும்.


கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு சமன் அளவு எடுத்து இடித்து, தேன், போதுமான அளவு சேர்த்து லேகிய பதமாகக் கிளறி வைத்துக் கொண்டு சுண்டை அளவு சாப்பிட்டு பால் குடித்து வர வீரிய விருத்தியும், உடலுறவு சக்தியும் பலப்படும்.


கசகசாவின் காய் ஓட்டிற்குத்தான் போஸ்தக்காய் ஓடு என்பார்கள். மது விலக்கு அமுலில் இருந்த போது இந்தக் காய் ஓட்டல் குடிநீர் வைத்து போதை தரும் பொருளாக உபயோகித்து வந்தனர். தற்காலம் இதற்கு அவசியமில்லை. காரணம் மதுவிலக்குதான் எடுபட்டும் போனதே ! ஆனால் இந்த ஓட்டில் குடிநீர் செய்து கொடுக்க, அஜீரண பேதி, சீதபேதி, அதிசார பேதி ஆகியன போகும்.


போஸ்தக்காய் ஓடு, அதிவிடயம், கடுக்காய் பூ, சிறுநாகப்பூ, இவை வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்கக் காய்ச்சி வேளை ஒன்றுக்கு 100 மில்லி கொடுத்து வர, பேதிகள் யாவும் நின்று போகும்.


இந்தக் காய், செடியில் உள்ள போதே பச்சை காயின் பேரில் மாலை நேரம் சூரிய ஒளி மறைந்த பின்பு மெல்லியதாக கீறிவிட்டு விடுவார்கள். கீறின இடத்திலிருந்து பால் வடிந்து உறைந்திருக்கும். அதிகாலையில் அந்தப் பாலை எல்லாம் சேர்த்து வழித்து சேகரிப்பார்கள். இது தான் 'அபினி' என்பது. போதை தரும் பொருள்களில் அபினியைப் போன்ற கேடு செய்யும் பொருள் இல்லை. ஒரு அரிசி அளவு அபினி சாப்பிட்டவனுக்கு மூன்று நாளானாலும் போதை தெளியாது. அவ்வளவு கடுமையான போதைப் பொருள் அபினி. கடந்த நூற்றாண்டுகள் வரை சீன தேசத்தவர்கள் இந்த அபினிக்கு அடிமையாகி அவல வாழ்க்கையில் அவதியுற்றனர் என்றால் மிகையாகாது. பிறகு அபினி சாப்பிடுவதை சட்டபூர்வமாகத் தடுத்து நிறுத்திய பின்னர் தான், சீனா தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கியது என்று கூறலாம்.


போதைப் பொருளாக எந்தப் பொருளையும் ஏற்றவர்கள் அதனை எப்படியாவது மறக்கவும் செய்யலாம். ஆனால் அபினியை போதைக்குப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்துமீள வழிகிடையாது.எனவேதான் நம் தமிழகத்திலே அபினி சாப்பிடுபவர்களைப் பதிவு செய்து கொண்டு அவர்கள் வரையில் தாலுக்கா கஜானா மூலம் அளவுடன் கொடுத்து வந்தார்கள்.


கசகசா பால் எனப்படும் இந்த அபினி ஓர் கடுமையான போதைப் பொருள் என்றாலும், நமது சித்த மருத்துவத்திலே பலவித தீராத நோய்கட்கு அபினியைச் சுத்தி செய்து அளவுடன் கொடுப்பதால் நோய் முற்றும் நீங்கப் பெறுகின்றன.


துயரடக்கும், இசிவகற்றும் தாபமகற்றும், வியர்வை பெருக்கும்,கோழையகற்றும், சிறுநீர் பெருக்கும், உறக்கமுண்டாக்கும். குருதிப்போக்கடக்கும் வெப்பமுண்டாக்கும், தாது வெப்பமகற்றும், ஆகிய அருங்குணங்களையுடையதாகிறது. எனவே இதனை முறையோடு தக்க அளவில் தரப்படுவது சித்த மருத்துவர்களின் அனுபவமுறையாகும்.


பொதுவாக, காலரா என்ற வாந்தி பேதியைப் போக்குவதில் சிறப்புடையது. சீதபேதி, அசீரணபேதி, வாந்தி,குன்மம், சூதக 

முறையாகும்.


பொதுவாக, காலரா என்ற வாந்தி பேதியைப் போக்குவதில் சிறப்புடையது. சீதபேதி, அசீரணபேதி, வாந்தி, குன்மம், சூதகவயிற்றுவலி,உதிரப்போக்கு, பெரும்பாடு, பாண்டு, அதிமூத்திரம், மதுமேகம், பல்வலி, காதுவலி, கண்ணோய், அண்டவாதம், கீல் வாதம், இடுப்பு வலி, கால் குடைச்சல், இசிவு, வாதப்பிணிகள், உறக்கமில்லாத நோய்கள், அபஸ்மாரம், உன்மத்தம், மனக்கலக்கம் சித்தப்பிரமை ஆகிய நோயாளிகளுக்கு உடல் பலமறிந்து, மனதிடமறிந்து, அளவு அறிந்து, கால இட பேதங்களறிந்து அபினியைக் கொடுக்க நோய் முற்றும் நீங்கும்.


நோயே இல்லாதவர்கள் அபினியைப் பற்றி நினைக்கவும் கூடாது. தவறி உபயோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் மேற்கண்ட நோயெல்லாம் உண்டாகும் என்பதில் ஐமில்லை அதனால் தான் அபினி, கஞ்சா, போன்றவைகளைச் சித்த மருத்துவர்கட்கு கட்டுப் படுத்தி லைசென்ஸ், பர்மிட், மூலமாக வினியோகம் செய்கின்றனர்


அபினியை சுத்தி செய்யும் முறையும், அதனை மருந்தாகச் செய்து நோயாளிகட்கு வினியோகம் செய்வதும், சித்த மருத்துவம் பயின்று பரம்பரையாக செய்துவரும் மருத்துவர்கட்கே உரியதாகும். எனவே இந்த முறை செயல் விளக்கங்களை பொது மக்களுக்கு வெளி யிடுவது உகந்ததல்ல ! என்றாலும் அபினியால் தீரும் நோய்களுக்கு சித்த மருத்துவ முறைகளாவன : சாதிக்காய் மாத்திரை, சாதிக் காய்ச் சூரணம், கபாடசூரணம், கபாடலேகியம், கபாட வடகம், கட்டுவாதி மாத்திரை, அபினி எண்ணை போன்ற முறைகளை சித்த மருத்துவர்கள் முறைப்படி தயாரித்து வைத்து, குறிப்பிட்ட நோய்களுக்கு கொடுக்க பொதுமக்கள் சித்த மருத்துவர்களை உற்சாகப் படுத்தினர்.

தேங்காய் பால்

 *சகலவிதமான* *நோய்களையும்*

*குணமாகக்கும்…*


*தேங்காய்_பால்;*


தேங்காய்க்கும் நமக்கும்

உள்ள ஒற்றுமை நாம்,அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்...


பொதுவாக தேங்காயில்

அதிகமாக கொழுப்பு உள்ளது

என்பது உண்மைதான்

ஆனால்,எப்பொழுது கொழுப்பு

உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்..., தேங்காய் கொழுப்பாய் மாறும்


 தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்)


 முடிந்த அளவு தேங்காயை பச்சையாக சாப்பிடுங்கள்…


 உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்


 தேங்காயை பச்சையாக

ஒரு வேலை உணவாக

எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்


தேங்காயை உடைத்த

அரைமணி நேரத்திற்க்குள்

பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,

அதுதான் அமிர்தம்


தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். 


தேங்காய் பாலில் நார்ச்சத்து , வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன. 


தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.


உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.


செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.


கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.


தேங்காய் பாலில் லாரிக் ஆசிட் இருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.


 தாய்ப்பாலில் இருக்கும்

மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை


சகலவிதமான நோய்களையும்

குணமாகக்கும்


உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்

இரத்தத்தை சுத்தமாக்கும்


உடலை உரமாக்கும்


உச்சிமுதல் பாதம்வரை

உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்


தேங்காயை துருவி சிறிது

நாட்டு சர்க்கரை சேர்த்து

குழந்தைகளுக்கு மாலை

சிற்றுண்டியாக அளியுங்கள்

அவ்வளவு ஆரோகியம்


பழங்காலத்தில், இறக்கும்

தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள் ஆனால் இப்போது,மாட்டு பால் ஊற்றி

துக்கத்தில் ஆழ்கிறார்கள்


தாய்ப்பாலுக்கு மாற்றாக,

தேங்காய் பாலை

குழந்தைகளுக்கு கொடுத்து

காப்பாற்றி இருக்கிறார்கள்


ஆனல் இப்போது,இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்


காலையில் தேங்காயை

 துருவி, அதனை அரைத்து

பாலெடுத்து அதனுடன்

நாட்டுச் சர்க்கரை அல்லது

கருப்பட்டி அல்லது தேன்

சேர்த்து, (பாக்கட் பாலை

தவிர்த்து விட்டு), அதற்கு

பதிலாக தந்து பாருங்கள்

ஆரோகியத்தை


*தசை நரம்புகள் இறுக்கம்*


வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.


*உடல் எடை*


பெரும்பாலானோர் தேங்காய் பால் அதிகம் அருந்தினால் உடல் எடை கூடிவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.


*இரும்பு சத்து*


அனைவருக்குமே உடலில் இரும்பு சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.


*எலும்புகள்*


எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும்

அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.


*இளமை தோற்றம்*


தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.


*நன்றி* 

*நட்பும் நிகழ்வும் குழு* 


https://chat.whatsapp.com/IxeZHgZZ06i67N9xOf3dvT.





*கீல்வாதம்*


கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது. செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.


*உடல் சுத்தி*


நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்துமே நச்சுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.


*புராஸ்டேட் சுரப்பி*


ஆண்கள் அனைவருக்குமே தங்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு அடியில், மலக்குடலுக்கு மேற்புறமாக அமைந்திருக்கும் சுரப்பி தான் புராஸ்டேட் சுரப்பி. இன்று பல ஆண்களுக்கும் நடுத்தர வயதை நெருங்கும் காலத்தில் புராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் நிலை இருக்கிறது. தேங்காய் பால் அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று ஏற்படுவததற்கான வாய்ப்புகள் குறைகிறது.


*நோய் எதிர்ப்பு திறன்:*


ஒரு சிலருக்கு அவ்வப்போது ஜுரம், சளி போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் அவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் வலிமையின்றி இருப்பது தான். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் உடலை சுலபத்தில் தொற்றி தாக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


*நீரிழிவு:*


உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் வந்த பின்பு அவதிப்படுவதை விட அந்நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. மாங்கனீஸ் சத்து உடலுக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. இந்த சத்து நீரிழிவு ஏற்படாமல் உடலை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.


*தேங்காய்பால் வைத்தியம்:*


தாய்ப்பாலுக்கு நிகரான………

தேங்காய் பால்


 *செய்முறை:*


*தேவையான பொருட்கள்:*


தேங்காய் துருவல் – ஒரு கப், 


பொடித்த பனை வெல்லம் – ஒரு கப், 


ஏலக்காய் – 2, 


ஜாதிக்காய் – ஒன்று.


*செய்முறை:*


சுடச்சுட ஆரோக்கியம் மிகுந்த இந்த தேங்காய் பால் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்கு துருவிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கும் போது தேங்காய் உடைய தோலும் சேர்ந்து தான் நமக்கு கிடைக்கும் ஆனால் துருவி கொள்ளும் பொழுது தேங்காய் தோல் இல்லாமல் நமக்கு தேங்காய்ப் பூ மட்டும் அழகாக கிடைக்கும். எனவே துருவி கொள்வது மிகவும் நல்லது.


துருவிய தேங்காய் பூக்களை மிக்ஸியில் போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஒரு சுத்தமான காட்டன் வெள்ளைத் துணியில் ஊற்றி பாத்திரத்தில் பிழிந்து கொள்ள வேண்டும். இது முதல் பால் எனவே இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


இரண்டாவதாக மீண்டும் அதே தேங்காயை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எந்த அளவிற்கு பிழிய முடியுமோ, அந்த அளவிற்கு நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக எடுத்த இந்த தேங்காய் பாலுடன் தேவையான அளவிற்கு பொடித்து வைத்துள்ள பனை வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.


இப்போது அடுப்பை பற்ற வைத்து தேங்காய் பாலை சுட வையுங்கள். தேங்காய்ப் பால் ஓரங்களில் நுரைத்து வரும் பொழுது நீங்கள் முதலில் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பாலை எப்பொழுதும் பொங்க விடக்கூடாது. தேங்காய் பால் நுரைத்து பொங்கினால் கெட்டுப் போய்விடும். மீண்டும் இதே போல ஓரங்களில் நுரை தட்ட ஆரம்பித்ததும் மிக்ஸி ஜாரில் பொடியாக்கி வைத்துள்ள ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் இரண்டும் கலந்த தூள் இதனுடன் சேர்த்து கலந்து கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.


இப்போது சுடச்சுட டம்ளரில் சுவையான தேங்காய்ப்பால் பரிமாற வேண்டியது தான். இதில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோய் தாக்குதல்களை குறைக்கும். இதில் இருக்கும் அற்புத சத்துக்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறினாலும் தகும். எனவே உங்களால் முடிந்த பொழுது அடிக்கடி இதை செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே!


.இருமலபோக்க……


*தேவையான பொருட்கள்:*


அதிமதுரம் - 5 துண்டுகள்


தேங்காய்ப் பால் - 1 டம்ளர்


சுக்கு பொடி - 1 டீஸ்பூன்


தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு


ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்


*செய்முறை:*


அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.


வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதனை ஆறவைத்து பருகலாம்.


.*சுக்கும் மஞ்சளும்;*


தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.


மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.


இரத்தசோகை மற்றும்இரத்தம் சுத்தமாக…


*தேவையான மூலப்பொருட்கள்:*


தேங்காய்ப்பால் – 100 மி.லி


ஆப்பிள் – 100 கிராம்


பன்னீர்ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி


குங்குமப்பூ – ஒரு கிராம்


நாட்டு தேன் – 3 தேக்கரண்டி


*செய்முறை:*


 இந்த பானம் தினமும் இரவு எடுக்க கூடியது ஆகையால் தினமும் புதிதாக தயார் செய்து கொள்ளுங்கள்


 ஆப்பிள் தோல் நீக்கி கொள்ளுங்கள், ரோஜா பூக்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்


 தேங்காய் பாலில் ஆப்பிள் மற்றும் ரோஜா பூக்களை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்


 பிறகு, குங்குமப்பூ, தேன் கலந்து கொள்ளுங்கள், குறிப்பாக குங்கும பூ அளவாக குறைவாக தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


 மேலும்,குடிக்க சிரமம் இருந்தால் பால் கலந்து கொள்ளலாம்


*சாப்பிடும் முறை:*


 தினமும் இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 7 நாட்கள் குடிந்தால் போதுமானது


*நன்மைகள்:*


 உடலில் இரத்தம் ஊரும்


 இரத்தம் சுத்தமாகும்


 ரத்த சோகை சரியாகும்


ரத்த திட்டுகள் பெருகும்

உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை.

உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன.


தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம்,


இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால்

நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு!

 **

🌹🌹🌹

“நமது வாழ்க்கையில் எல்லாம் ஒரு காரணத்திற்காகதான் நடக்கிறது” என்ற நம்பிக்கை பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் அதன் பின்னால் ஒரு நோக்கம் அல்லது பெரிய அர்த்தம் இருப்பதாக இது நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதன் உண்மையை புரிந்துகொள்ள முடியும்.


இந்த கருத்தின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், என்னதான் நாம் அதிகப்படியான துன்பங்களை எதிர்கொண்டாலும், அதன் நோக்கம் மற்றும் அனுபவத்தை புரிந்துகொண்டு வாழ்க்கையில்

Sunday, May 26, 2024

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?

படித்ததில்_பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு  பதிவு ....


'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்...


"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "

என்கிறீர்களா...?

 சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?


'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக

சரக் கொன்றை - தினம் ஒரு மூலிகை

 

*சரக் கொன்றை* நீல் சதுரமான சிறகு கூட்டில்களையும் சரம் சரம் பளிச்சிடும் மஞ்சள் நிற பூங்கொத்துக்களையும் நீண்ட உருளை வடிவ காய்களையும் உடைய இலை உதிர் மரம் பட்டை பூ காய் வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை மரம் நோய் நீக்கி உடல் தேற்றும் காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தி உண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும் பூ வயிற்று வாய்வுகளை அகற்றும் நுண்புழு கொல்லும் காயில் உள்ள சதை பகுதி சரக்குன்றை புலி எனப்படும் 20 கி

ஜாதிக்காய் - தினம் ஒரு மூலிகை


நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குகிறது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால கலந்து இரவு படுக்கும் போது சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கி நரம்பு வன்மையையும் நல்ல தூக்கத்தோடும் தரும் குழந்தையின்மை ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது உடலுறவில் நாட்டம் இல்லாமல் போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச்சிறந்த மருந்து அஜீரணம் நீங்க ஜாதிக்காய் சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து இரண்டு பங்கு சீரகத்தை சேர்த்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை நீங்கும் பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும் வாந்தி வயிற்றுப்போக்கில் ஏற்படுகிற தண்ணீர் தாகத்தை தணிப்பதற்கு ஜாதிக்காயை ஊற வைத்த நீர் அருந்த நல்ல பலன் கொடுக்கும் இது ஒரு சமையலில் அசைவ உணவில் மனமூட்டும் பொருளாக பயன்படுகிறது ஊறுகாய் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது கனிக்கும் விதைக்கும் இடையே விதையை சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் பகுதி தான் ஜாதி பத்திரி இதழ் விதையையும் ஜாதி பத்திரி இதழும் தான் மனம் மருத்துவ குணமும் கொண்டவை நன்றி.

இன்றைய நாளில் பிறந்தவர்.* (26-மே)

*சாலி ரைட்.*


🚀 அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் விண்வெளி வீராங்கனையான சாலி ரைட் 1951ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார்.


🚀 இவர் 1978ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். மேலும், 1983ஆம் ஆண்டு விண்வெளியில் கால்பதித்த முதல் அமெரிக்க பெண் என்ற வரலாற்றை படைத்தார். இவர் மொத்தம் 343 மணிநேரம் விண்வெளியில் இருந்துள்ளார்.


🚀 ஆர்பிட்டர் சேலஞ்சரில் இரண்டு முறை பறந்து சென்ற பிறகு, இவர் 1987ஆம் ஆண்டு நாசாவை விட்டுச் சென்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.


🚀 தேசிய வீராங்கனையாக மதிக்கப்படும் இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார்.


*மனோரமா.*.


🎥 ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள் 1937ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோபிசாந்தா.


🎥 தமிழ் திரையுலக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் ஆகியோருடன் நடித்த பெருமைக்குரியவர்.


🎥 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய திரைப்பட விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.


🎥 இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

Saturday, May 25, 2024

கைதொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை ஒத்துக் கொள்

இன்று எவ்வளவு தான் விழுந்து விழுந்து படித்தாலும் இவர்களின் தயவு நமக்கு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.  


என்னதான் படித்தாலும் கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.. 

"புரோட்டா மாஸ்டர் தேவை! மாதம் முப்பதாயிரம் சம்பளம்" என ஒரு பத்தியிலும், அடுத்த பத்தியில் "இஞ்சினீயர் தேவை மாதம் பனிரெண்டாயிரம் சம்பளம்" எனவும் விளம்பரம் இருக்கும்.


ஒரு கொத்தனார் ஒரு நாளைக்கு ஆயிரம்...

உதவி ஆளுக்கு எழுநூறு...

அதேபோல் வயலில் நான்கு மணி நேர வேலைக்கு அறுநூறு....


உரம் போடுவதற்கு மூட்டைக்கு இருநூறு... அவர் ஒருமணி நேரத்தில் அறுநூறு சம்பாதிப்பார்.

கூடவே டீ வடையும்.


ஆனால் ஒரு கடையில் பனிரெண்டு மணி நேரம் வேலை பார்ப்பவருக்கு நானூறு.


நம் சமுதாயத்தை பொறுத்த வரை ஒருவர் படித்தால் அவருக்கு சம்பளம் அதிகம் என்ற காலம் தற்போது மலையேறிவிட்டது!

ஒரு காலத்தில் அன்றாட வேலை பார்த்தவர்கள் ஒரு ரூபாய் வாங்கும் போது படித்தவர்கள் 10 ரூபாய் வாங்கினார்கள்.


"நான்தான் அன்றாட வேலை பார்க்கிறேன்! என் மகனாவது படித்து நல்லா இருக்கட்டும் "என பெரும்பாலனவர்கள் எண்ணமாக இருந்தது!


"அப்ப, படித்தால் சம்பாதிக்க முடியாதா?" என்ற கேள்வியும் எழுகிறது.

படிப்பை நாம் சம்பாதிக்க வழிகாட்டியாக வைத்துக் கொள்ளனுமே தவிர அந்த படிப்பே நமக்கு சம்பாதியத்தை தராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


தற்போதைய நிலைமையில் படிப்புக்கேற்ற சம்பாத்தியம் என்பது மருத்துவம் அதற்கு சமமான உயர் படிப்பு இப்படித்தான் இருக்கிறது.


தற்போதை சூழ்நிலையில் பார்த்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் மருத்துவர்களின் நிலைமையும் இஞ்சினீயர் அளவுக்கு வந்து விடும்.


படித்தவனுக்கே சம்பளம் கம்மி, படிக்காதவனுக்கு ஏன் உயர்வு என்றால் இங்கு உழைக்க யாரும் தயாரில்லை!

உடல் உழைப்பை யாரும் விரும்புவதில்லை,

"நான் படிச்சுட்டேன் ஏன் உழைக்கனும்?" என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.


இன்றையத் தேதியில் ஒரு நகரத்தில் நீங்கள் நினைத்தால், ஒரு மணி நேரத்தில் பத்து இஞ்சினீயரை அழைக்கலாம்

ஆனால் ஒரு கொத்தனாரையோ, எலக்ட்ரீசியனையோ, ஏசி மெக்கானிக்கையோ,பெயின்டரையோ, தச்சரையோ அழைக்க ஒரு வாரம் நீங்கள் காத்து இருக்கனும்.


நாம் என்ன படிச்சா என்ன!

முதலில் நாம் உழைக்கக் கற்றுக் கொண்டால் நம் வாழ்வு தானாக உயரும்...

செய்தித் துளிகள் - 25.05.2024(சனிக்கிழமை)

*தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து,பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.*

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

👉ஜூன் 6ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🎁🎁பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்.

🎁🎁பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

🎁🎁தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

🎁🎁கூட்டுவு மேலாண்மை பட்டயப்படிப்பு: பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு

🎁🎁அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

🎁🎁ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

🎁🎁பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

🎁🎁ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்/காப்பாளர்களுக்கு 11.01.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குநர் உத்தரவு.

🎁🎁மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு - Director Proceedings வெளியீடு.

🎁🎁பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை நாம் உடனடியாக பெற்று வெரிஃபை செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை தளர்த்தி, அந்த ஓடிபியை நாம்,  ஓடிபி வந்த மூன்று தினங்களுக்குள் வெரிஃபை பண்ணுவதற்கான Option - ஐ Enable செய்துள்ளார்கள்.

🎁🎁திடீரென சுழன்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு

👉உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள ஆலயத்துக்கு 6 பக்தர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது இறங்குதளத்தை நெருங்கியபோது இயந்திரக் கோளாறு காரணமாக, ஹெலிகாப்டர் திடீரென சுழன்று பள்ளத்தில் இறங்கியது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி எதிலும் மோதாமல் பத்திரமாக அதனை தரையிறக்கியுள்ளார். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

🎁🎁ஒருவர் மட்டுமே பயணிக்கும் பறக்கும் கார்

அமெரிக்காவைச் சேர்ந்த Lift Aircraft நிறுவனம் HEXA என்ற பறக்கும் காரை வடிவமைத்து அசத்தல்.

18 சுழலும் சக்கரங்களைக் கொண்ட இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

4.5 மீட்டர் அகலம், 2.6 மீட்டர் உயரம், 196 கிலோ எடை கொண்டது.

இதை ஜாய்ஸ்டிக் மூலம் சுலபமாக இயக்கமுடியும். விரைவில் இந்த கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎁🎁டெல்லி மெட்ரோ ரயிலில் காங். வேட்பாளருடன் ராகுல் காந்தி பயணம்.. முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் குறித்து கலந்துரையாடல்.

🎁🎁கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகியோர் உத்தரவு

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவு.

🎁🎁உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்;இன்று புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

🎁🎁மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

🎁🎁தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

🎁🎁முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு.

🎁🎁வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை; நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் வாய்த்துள்ளார் : அமைச்சர் ரகுபதி கண்டனம்.

🎁🎁ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

எந்தவித பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது.  ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6650-க்கும் 

சவரன் ரூ.53200-க்கும் விற்பனை ஆகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.                                              🙏🙏🙏🙏

வாழ்க்கையில் கஷ்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் தெரியுமா?

 **

நம்முடைய வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியதாகும். எப்போதுமே துன்பம் வந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். எப்போதுமே இன்பம் என்றால் வாழ்க்கை திகட்டிவிடும். இன்பமும், துன்பமும் மாறி வரும்போது வாழ்க்கையை எதிர்கொள்ளவும், வாழ்வதற்கும் பிடிப்பை தரும். இருப்பினும் சில சமயங்களில் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து மனம் வருந்தும்போது நான் சொல்ல போவதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


எப்போதாவது மலையேறியதுண்டா? கடினமாக மலையேற்றம் செய்த பிறகு கடைசியாக மேலே ஏறி காணக்கூடிய காட்சி அற்புதமாக இருக்கும். கஷ்டப்பட்டு மலையேறியதை மறந்துவிடும் அளவிற்கு அழகோவியமாக இருக்கும் இயற்கையை ரசித்து கொண்டேயிருக்கலாம்.


அப்படி நாம் உயரமான மலையினை ஏறி அங்கிருந்து கீழே வந்த பாதையை பார்க்கும்போது, நாம் வரும்போது பிரமாண்டமாக தெரிந்து வீடுகளும், கட்டிடங்களும் உயரத்திலிருந்து பார்க்கும்போது, சின்ன பொம்மைகள் போல காட்சியளிக்கும். இவ்வளவு ஏன்? உலகத்திலேயே உயரமான எவரெஸ்ட் மலைக்கூட விமானத்திலிருந்து பார்க்கும்போது சிறியதாக தெரியும்.


நம்முடைய வாழ்வில் வரும் கஷ்டங்களும் இது போன்றது தான். பக்கத்திலிருந்து பார்க்கும்போது எல்லா பிரச்னைகளும் பிரமாண்டமாகவும், பெரிதாவும் தெரியும். இதுவே பிரச்சனைகளை தூரத்தில் வைத்து பாருங்களேன். அது எவ்வளவு சிறிய பிரச்னை என்பது புரியும். இதுக்கு போயா இவ்வளவு வருத்தப்பட்டோம் என்று ஆகிவிடும்.


பிரச்னை எப்போதும் நம்மை வருத்தப்பட வைப்பதில்லை. அதை நாம் பார்க்கும் விதமும், கையாளும் விதமுமே நம்மை வருத்தப்பட வைக்கிறது. பெரிதாக இருக்கிறதே என்று நிறைத்து வருத்தப்படும்போது பாரமாகவும், விசாலமாகவுமே தெரியும். இதுவே ‘இதையெல்லாம் என்னால் சமாளிக்க முடியும்’ என்ற எண்ணம் மனதில் தோன்றும்போது, மலை போல இருக்கும் துன்பங்கள் கூட துரும்பாக மாறிவிடும். இன்பமோ, துன்பமோ அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது நம் வாழ்க்கையின் போக்கை மாற்றக்கூடியதாகும்.


நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று வெவ்வேறு உயரத்தை அடையும் போதும், அதுவரை நம்மை செய்த கேலி, கிண்டல், அவமானம், போராட்டம் இவை அனைத்துமே நமக்கு சிறிய துரும்பாகவே தெரியும். எவ்வளவு உயரத்திற்கு வந்தாலுமே ஏறி சென்ற படியை மறக்க கூடாது என்று சொல்வார்.


இன்று நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு அன்று பட்ட துன்பங்களும், கஷ்டங்களுமே காரணமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். துன்பங்களே நம்மை பக்குவமான மனிதர்களாக செதுக்கியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அதை சரியாக புரிந்துகொள்வது மேலும் வாழ்வில் வெற்றியடைவதற்கான வழியாகும்.

Friday, May 24, 2024

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு

 🙏🏽🙏🏽

ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தாலே விபத்து, ஆயுள் காப்பீடுகள் உண்டு - எப்படி பெறுவது

கட்டுரை தகவல்

எழுதியவர்,சுபாஷ் சந்திர போஸ்

பதவி,பிபிசி தமிழ்

நம்மில் பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அல்லது விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் நாம் தவணை முறையில் பணம் செலுத்தி நமக்கு விபத்து நேரும்போது அல்லது இறப்பு நிகழும்போது அதன் பலன்களை நாமோ அல்லது நமது குடும்பமோ பெற்று

Thursday, May 23, 2024

பலன் தரும் மரங்கள் 🌲🌲🌲🌲

 🦜🦜🐿️🐿️கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்


கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்


முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்


தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்


உலக ஆமைகள் தினம்

 *இன்றைய நாள்.*

(23-மே)

**

🐢 உலக ஆமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

🐢 அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

*சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்.*


💉 வளரும் நாடுகளில்

சங்கீலை(அ)முட்சங்கஞ்செடி - தினம் ஒரு மூலிகை


*சங்கீலை(அ)முட்சங்கஞ்செடி*.   பளபளப்பான எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் நீண்ட முட்களையும் வெண்மையான உருண்டை வடிவ உண்ணக்கூடிய பழங்களை உடைய குறும் செடி புதர் காடுகளிலும் ஆற்றங்கரையிலும் வளரும் இலை வேர் பால் பழம் மருத்துவ பயன் உடையது சிறுநீர் பெருக்கி ஆகவும் இலை உடல் பலம் பெருக்கியாகவும் வேர் கோழை அகற்றி இருமல் தணிக்கும் மருந்தாக செயல்படும் சங்கீலை தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் உட்கொள்ள கபரோகம் தீரும் சங்கிலை வேப்பிலை