Monday, July 22, 2024

செய்தித் துளிகள் 22 07 2024 (திங்கள் கிழமை)

🌈🌈திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்.

🌈🌈தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்து கொள்ள வேண்டியர்கள் முன்னுரிமை எண் வெளியீடு.

🌈🌈உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி

.

🌈🌈கேரளாவில் நிபா பாதிப்பால் சிறுவன் உயிரிழப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு, மலப்புரத்தில் சிகிச்சையில் இருந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

🌈🌈மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போக்குவரத்து கழகம் வெளியீடு.

🌈🌈அதிகரிக்கும் நிபா வைரஸ் தொற்றுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

🌈🌈இந்திய கிரிக்கெட்  வாரியத்துடன் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30 அல்லது 31ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அணியின் உரிமையாளர்கள் வீரர்களை கூடுதலாக தக்க வைத்துக் கொள்வது,மேலும் ஒரு அணிக்கு கூடுதல் தொகை செலவிட அனுமதி அளிப்பது தொடர்பாக விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

🌈🌈ஜூலை 21 முதல் 31 வரை இந்தியா முதன்முறையாக நடத்தும் யுனெஸ்கோவின் முக்கிய நிகழ்வான உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

🌈🌈வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலால், தீவிர பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு படையினர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க உஷார்படுத்தப்பட்டுள்ளனர்

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை

🌈🌈முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம்

"ரூ.2,391.72 கோடியில் பேரூராட்சிகளின் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

ரூ.1,414 கோடியில் பல்வேறு சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1,412 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், ரூ.51.81 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு  மேம்பாட்டுத் திட்டம்

மாமல்லபுரம், வேளாங்கண்ணி பேரூராட்சிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சுகாதார உணவு மையங்கள் அமைக்கப்படுகின்றன

நபார்டு திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளில் ரூ.602 கோடி மதிப்பில் 515 சாலை, 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன

ரூ.155.56 கோடியில் எல்.இ.டி தெரு விளக்குகள், ரூ.201.65 கோடியில் பேருந்து நிலையங்கள் - சந்தைகள்"

நகரமயமாதலில் பேரூராட்சிகளின் பங்கு மகத்தானது எனவும் தமிழக அரசு பெருமிதம்

🌈🌈எய்ம்ஸ் பாட்னா மற்றும் RIMS ராஞ்சிக்குப் பிறகு, பாரத்பூர் மருத்துவக் கல்லூரியில் MBBS படிக்கும் இரண்டு மாணவர்கள் கைது.

🌈🌈புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: கூறியது- முதலில் சட்டக் குழுவிடம் இருந்து ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்;  நான்கு வாரங்களில் பதில் கேட்கப்பட்டது.

🌈🌈வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் வெளியுறவு அமைச்சகம் கவனம் செலுத்துகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

🌈🌈அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன்!

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

👉தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என முதல்வர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

👉முதல்வர்வரின் சமுக வலை தளப்பதிவில்:

👉மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

👉தாம்பரம் -செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்துக்குக்கான ஒப்புதல் வழங்க வேண்டும்.

👉10 ஆண்டுகளாக வருமான வரி சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

👉தமிழ்நாட்டில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்

👉கிராமப்புற, நகர்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்.

👉கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹நகைச்சுவை  மன்னன் சார்லி  சாப்ளின்  கூறிய 25  தத்துவங்கள் …

👉1  இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை , உங்கள் பிரச்சினைகள் உட்பட .

👉2  சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

👉3  சிரிப்பு தான் வலிக்கு மருந்து !  சிரிப்புதான் வலிக்கு நிவாரணம் , சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும் .

👉4  கனவுகள் எல்லாம் நனவாகும். 

நிறைய காயங்களுக்குப் பிறகு .

👉5  உன் மனம் வலிக்கும் போது சிரி . பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை

👉6  இதயம் வலித்தாலும் சிரி .  அது உடைந்தாலும் சிரி .

👉7  என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால் , நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.

👉8  எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு , ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக்கொண்டுதான் இருக்கும்.

👉9  பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். 

ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது.

👉10  கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.

👉11  ஆசைப்படுவதை மறந்து விடு. 

ஆனால், ஆசைப்பட்டதை மறந்து விடாதே.

👉12  உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். 

ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

👉13  போலிக்கு தான் பரிசும் பாராட்டும் . உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

👉14  எப்போதும் மழையில் நனைந்தபடியே நடக்கப் பிடிக்கிறது.  என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.

👉15  நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்

👉16  நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன் , நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும்போது சிரிப்பை மறக்கிறேன்.

👉17  வாழ்க்கை  அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல , அனுபவிப்பதற்கு .

👉18  நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. 

நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால் , நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும் போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

👉19  உங்களை தனியாக விட்டாலே போதும்… வாழ்க்கை அழகானதாகத்தான் இருக்கும்.

👉20  புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்

👉21  விவாதங்கள் , மோதல்கள் அல்லது பிரச்சினைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.

👉22  ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவற விட்டுவிடுவீர்கள்.

👉23  நண்பனுக்கு உதவுவது சுலபமானதுதான் . ஆனால் , உங்கள் நேரத்தை அவனுக்காக கொடுக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.

👉24  அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.

👉25  கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.

No comments:

Post a Comment