Sunday, July 21, 2024

பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை


*தினம் ஒரு மூலிகை*

* *பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை* 

* எதிர் அடுக்கில் அமைந்த எழுதிய வெகுட்டல் மனம் உடைய சற்று வட்டமான இலை உடைய இனம் ஒற்றை பேய்மிரட்டி எனவும் வெது படைக்கு எனவும் அழைக்கப்படும் இலை நீளமாக இருப்பதை இரட்டை பேய்மிரட்டி என்றும் அழைப்பார்கள் முறையே ஆண் பெண் என்று கருதப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு

காணுகின்ற நோய்களுக்கு பெண் இலைகளையும் பெண் பிள்ளைகளுக்கு காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலைகளையும் சிகிச்சைக்கி ஏற்றது என கூறப்படுகிறது பேய் மிரட்டி இலையை பௌர்ணமி தினத்தில் அகல் விளக்கில் பச்சை இலையை திரியாக போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம் மருத்துவ குணங்கள் பசிமிகுத்தல் குடல் வாய்வு அகற்றல் வியர்வை பெருக்குதல் காய்ச்சல் தணித்தல் சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல் இசிவு தனித்தல் ஆகிய குணம் உடையது இலையை கொதிக்க வைத்து வேது பிடிக்க வாத ஜுரம் தீரும் இளைச்சாறு ஐந்து துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும் இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடிக்க சீத வாத ஜுரம் முறை ஜுரம் மலக்கழிச்சல் தீரும்.

இதன் இலையை சித்தர்கள் அருளியது ஜோதி இலை என்றும் அழைப்பார்கள் தீபம் ஏற்றும் பொழுது அதில் இருந்து வரும் புகை வாசம் தீய சக்திகளை அகற்றக் கூடியது எதிர்மறை ஆற்றலை வெளிக்கொண்டுவரும் தீபம் ஏற்றும் போது இலையை திரித்து போட வேண்டும் தீபம் எரியும் பொழுது என்னை இல்லாமல் இலை கருகக் கூடாது அப்படி செய்தால் தீய சக்திகள் நம் வீட்டில் குடி கொண்டு விடும் அதனால் என்னை இருக்கும் போதே தீபத்தை குளிர வைக்க வேண்டும் ஒரு முறை இட்ட ியை மறுமுறை இடக்கூடாது 10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியில் இட்டு வருத்து கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்து கொதிக்கும் போது 50 கிராம் பேய் மிரட்டி இலையை சிதைத்து போட்டு 125 மில்லியாக காய்ச்சி 15 மில்லியாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
 
நன்றி

No comments:

Post a Comment