Saturday, July 20, 2024

10 மூலிகைகள்

எனக்குத் தெரிந்த எளிதில் கிடைக்கும் 10 மூலிகைகளை குறிப்பிட்டுள்ளேன்👇👇👇

1)ஆவாரை

"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ " என்பது பழமொழி…

அந்த காலத்தில் வயல் வேலைக்குச் செல்லும் பெண்கள் தலையில் இந்த பூவை சூடிக்கொள்வர்..இது ஒரு விதமான குளிர்ச்சியை உண்டாக்கும்

உடலின் சூட்டை தணிக்கும்


ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும் போக்கும்.


2)செம்பருத்தி:


செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.


தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.


3)அம்மான் பச்சரிசி: 


இதை எங்கள் ஊரில் பாலாட்டாங்குலை


என்போம்..


ஆம்.. இதை கிள்ளினால் பால் வரும்…இந்த பால் மருந்து தயாரிக்க பயன்படுகிறது..


இந்த கீரை வகை ஆஸ்துமா, மூச்சுப் பிரச்சினை, இரத்தத்தை சுத்தப்படுத்துதல், உடல் வலிமை, நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது.


4)வாழைப்பூ:


வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.


5)கற்றாழை:


கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப் நிறைய கற்றாழை சாறு மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க உதவும்.


கற்றாழை, உயிரணுக்களை நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சைட்டோகீன்களை உற்பத்தி செய்ய வைத்து, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.


6)துளசி:


காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்..


7)பப்பாளி;


பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.


8)எருக்கு;


குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கு பாலைத் தடவ விஷம் இறங்கும்.முள் குத்திய இடத்திலும் எருக்கன் பாலை வைக்கலாம்..


9)குப்பைமேனி:


சொறி,சிரங்கிற்கு நல்ல மருந்து..


10)மருதாணி:


மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.


மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் ✍🏼🌹


🪴🪴🪴🪴🪴

No comments:

Post a Comment