Sunday, July 14, 2024

புன்னை - தினம் ஒரு மூலிகை


தினம் ஒரு மூலிகை* *புன்னை*

மரம் சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்கிறது தோட்டங்களிலும் வளர்ப்பது உண்டு இலை பூ

விதை பட்டை நெய் ஆகியவை மருத்துவ பயன் உடையது போக்கியாகவும் உடல் இசிவு நீக்கியாகவும் நாடி நடையை உயர்த்தி உடல் வெப்புத்தரும் மருந்தாகவும் பயன்படும் பூவை அரைத்து சிரங்கிற்கு மேல் பூச்சாக தடவலாம் இலையை ஊற வைத்த நீரில் குளித்து வர மேகரணம் சொறி சிரங்கு யாவும் மறையும் பூவை நிழலில் உலர்த்தி தூள் செய்து ஒரு சிட்டிகை காலை மாலை கொடுத்து வர டைபாய்டு தீரும் புன்னை நெய் பூசி வர மகா வாத ரோகம் முன் இசிவு பின் இசிவு கிருமி ரணம் சொரி சிரங்கு குட்ட ரோக புண்கள் தீரும் புன்னைநெய் 10 அல்லது 15 துளி சக்கரையில் கொடுத்து உப்பில்லா பத்தியம் இருக்க கொனேரியா என்ற வெள்ளை மே கிரணம் தீரும் உன்னை விதையை அரைத்து கொதிக்க வைத்து பற்றுப்போட முடக்குவாதம் கீழ்வாதம் வாத வலிகள் தீரும் பட்டையை குடிநீரால் புண்களை கழுவலாம் நன்றி.

No comments:

Post a Comment