Friday, July 12, 2024

புளியாரை

 


தினம் ஒரு மூலிகை* *புளியாரை*

 முக்கூட்டு இலைகளை கொண்ட நிலம் படர் சிறு செடி இலை புளிப்புச் சுவையுடன் இருக்கும் கீரையாக சந்தைகளில் விற்கப்படுவதுண்டு இலைகள் மருத்துவ பயனுடையவை இம்மூலிகை காய சித்தி

அளிக்க வல்லதாக இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறியிருக்கிறார் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய குணம் உடையது புளியாரை இலையுடன் சமன் வாழைப்பூ சேர்த்து பிட்டவியலாய் வேகவைத்து கசக்கி பிழிந்த சாரில் தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் கழிச்சல் தீரும் கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக பாகப்படுத்தி உணவுடன் சேர்த்து வர மூல வாயு பித்த மிகுதி சுவையின்மை மயக்கம் ஆகியவை தீரும் இலையை அரைத்து விழுது எலுமிச்சங்காய் அளவு மோரில் கலக்கி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் தீரும் இலையை அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும் தொடர்ச்சி நாளை .

No comments:

Post a Comment