Friday, July 5, 2024

பழம் பாசி (அ) நில துத்தி -தினம் ஒரு மூலிகை

 *

இலையானது மூல நோய் சர்க்கரை நோய் உடல் சூடு சிறுநீரில் விந்து வெளியேறல் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமாக்கும் கிராமப்புறங்களில் அதிக அளவில் பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு பழம் பாசி மருந்தாக பயன்படுகிறது இதை நிலத்துத்தி என்றும் அழைக்கப்படும் இலைகள் இதய வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களை உடையதாகும் உடல் சூடு குறைய இலையை நன்கு அரைத்து அதனை தலையில் தேய்த்து குளிக்கலாம் இதனால் உடல் சூடு குறையும் முகம் அழகு பெறும் உடலின் வெப்பத்தை சமநிலையாக்க உதவுகிறது கட்டிகள் கரைய இலையுடன் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து அதனை குழப்பி கட்டிகள் மீது வைத்து கட்டி வர அவை பழுத்து உடையும் மூல சூடு நீங்க இலை 20 கிராம் எடுத்து நன்கு அறிந்து அரை லிட்டர் பாலில் வேகவைத்து வடிகட்டி அதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து மூன்று வேளை சாப்பிட குணமாகும் 20 மில்லி அளவில் குழந்தைகளுக்கு காலை மாலை என இருவேளை கொடுக்க ரத்தக்கழிச்சல் சீத கழிச்சல் ஆசனம் வெளித்தள்ளுதல் ஆகியவை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment